புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2024)

தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை

தானியேல் 3:17

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்;


பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் நாட்களிலே, யூதா புத்திரராகிய தானியேல், அனினயா, மீஷhவேல், அசரியா ஆகிய வாலிபர்களும் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களின் வாழ்க்கையின் சாட்சியை பார்க்கும் போது, இவர்கள் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும், மனிதர்களையோ, பிரபு க்களையோ, ராஜாக்களையோ பிரியப்படுத்துவதிலும், தேவனாகிய கர்த்தரை பிரியப்படு த்துவதிலேயே மிக வைராக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள். அது வெறும் மத வைராக்கியம் அல்ல, மாறாக தேவ னைக் குறித்த வாஞ்சையும் தாகமும் அவர்கள் இருதயத்திலே இரு ந்தது. இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத் திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவ னாக் கினார். இதினிமித்தம், இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ராஜாவா கிய நேபுகாத்நேச்சர் தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் இவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். அத னால் அவர்கள் ராஜாவின் தயவைப் பெற்றுக் கொண்டார்கள். அந்நிய தேசத்திலே கைதிகளாக வந்த இந்த அனினயா, மீஷhவேல், அசரியா என்பவர்களின் வைராக்கியமானது சோதனைக்குட்படுத்தப்பட்டது. ராஜா நிறுத்திய பொற் சிலையை வணங்குவதற்கு இவர்கள் மறுப்பு தெரிவி த்தார்கள். ராஜாவின் தயவே இவர்கள் மேல் உக்கிர கோபமாக மாறி யது. அக்கினிச் சூளையானது ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி ராஜாவின் கட்;டளை பிறந்தது. அப்பொழுது இராணுவத்திலுள்ள பலசா லிகள் இவர்களை கட்டி, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போட் டார்கள். இவர்களோ ராஜாவின் தயவைப் பார்க்கிலும், தேவ தயவை யே மேன்மைப் படுத்தினதால், தங்கள் உடல்களை சுட்டெரிக்கக் கொடு ப்பதற்கும் தயங்கவில்லை. அந்த அக்கினி சூளையின் அனலை விட, ஆராதனை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என்னும் வைராக்கியமா னது இவர்கள் உள்ளத்திலே இன்னும் அதிகமாக அனல் கொண்டதா யிருந்தது. ஒரு வேளை இந்த அக்கினி சூளையோடு, பூமியிலே தங்கள் பணி நிறைவேறுவது தேவ சித்தமாக இருந்தாலும், இவர்கள் அதற்கும் ஆயத்தமாகவே இருந்தார்கள். இவர்கள் ஒன்றான மெய்த்தேவனாகிய கர்தரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, எரிகின்ற அக்கி னிக்குத் தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூத னை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

ஜெபம்:

ராஜாதி ராஜாவாகிய என் தேவனே, இந்த உலகத்திலுள்ள எந்தப் பொருளும், எந்த நபரும், வேறெந்த அந்நிய நாமங்களும் என் வாழ்க்கையிலே விக்கிரகமாகாதபடி என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 20:3-6