புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2024)

அன்பின் பெருக்கம்

1 யோவான் 4:12

அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.


புதிதாக திருமணமாகிய இளம் தம்பதிகள், ஒருவரையயொருவர் அநேக ஆண்டு கள் விரும்பியிருந்தார்கள். அவர்கள் இருவருடைய குடும்பங்களும்கூட இந்த விஷயத்தில் ஒருமைப்பட்டிருந்தார்கள். ஈரு டலும் ஓருயிரும் என்ற பிரகாரமாக தங்களுக்கிடையே இருந்த அன்பை குறித்து இருவருமே மேன்மை பாராட்டிவந்தார்கள். கணவன் மனை வியாக ஆரம்ப நாட்கள் நன் றாகவே இருந்தது, ஆனால் ஆண் டுகள் கடந்து செல்லும் போது, அவர்கள் இருவருக்கி டையே யுள்ள அன்பு சோதனைக் குட்ப டுத்தப்படும் சம்பவங்களானது வாழ்க்கையிலே ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுக ளும், வாக்குவாதங்களும் அவ்வப்போது வந்த போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் மன்னி த்து, மன்னிப்பை கேட்டு, அன்பிலே பெருகுவதை அவர்கள் வழக்கமும் பழக்கமுமாக்கிக் கொண்டார்கள். அநேக ஆண்டுகள் சென்ற பின்பு, திரு மணமாகுவதற்கு முன்னிருந்த அன்பைக் குறித்த அறிவும் வாழ்க் கையை ஆரம்பித்த நாட்களிலிருந்த அன்பைக் குறித்த அறிவும் எவ்வ ளவு மட்டுப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டார்கள். கணவன், மனைவி இருவரும் பெலவீனமுள்ள மனிதர்களாக இருப்பதால், இரு வரும் புரிந்துணர்விலும் அன்பிலும் வளர வேண்டும். ஆனால், பரலோக த்திலிருக்கின்ற தேவனோ, அன்பிலே, அன்றும், இன்றும், என்றென்றும் சம்பூரணராகவே இருக்கின்றார். பெலவீனராகிய நாமோ தேவ அன் பிலே பூரணப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒருவன் தான் தேவனை அன்பு செய்கின்றேன் என்பதை எப்படி தன் வாழ்வில் வெளிக்காட்ட முடியும்? உடன் சகோதரனைக் குறித்த அன்பிலே வளர்வதினால், அவன் தேவ அன்பிலே பெருகின்றவனாக இருப்பான். உடன் சகோதரனிடத் தில் அன்புள்ளவன் என்று எப்படி, எப்போது காண்பிக்க முடியும்? அந்த இளம் தம்பதிகளைப் போல ஆரம்ப நாட்களிளோ? அல்லது அன் பானது சோதனைக்குட்படுத்தப்படும் போதிலோ? பொதுவாக ஆரம்ப நாட்கள் நன்றாகவே இருக்கும். ஆனால் சோதனையின் நாட்களிலே நாம் மற்றவர்களுடைய தப்பிதங்களை மன்னிக்க, குற்றங்களை மறக்க, மன்னிப்புக் கேட்க பழகிக் கொள்ளாவிட்டால், அந்த உறவிலே தேவ அன்பின் பெருக்கம் இருக்காது. தேவனை ஒருவரும் ஒருபோதும் கண் டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக் குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

ஜெபம்:

என் பாவ சாபங்களை மன்னித்த தேவனே, நான் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மன்னிப்பை வழங்க, குறைகளை மறக்க, மன்னிப்பை கேட்டுப் பெற்றுக் கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:7-8