புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2024)

அன்பின் கற்பனைகள்

1 யோவான் 5:3

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.


குறித்த ஊர் ஒன்றில் வாழ்ந்து வந்த பெற்றோர்கள், தங்கள் இரண்டு பிள்ளைகளும் அவ்வப்போது சண்டை செய்து குழப்பங்களை ஏற்படு த்துவதைக் குறித்து மிகவும் கரிசனையுள்ளவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் பிள்ளைகளில்; மூத்தவனானவன், தன் இளைய சகோதரனுக்கு விரோதமான காரியத்தை செய்ததால், அவனுடைய தகப்பனானவர் அவனை அழை த்து, உன் இளைய சகோதரனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள் இல்லாவிடில், ஒரு கிழ மை நீ கனணனியில் விளை யாட முடியாது அத்தோடு வீட் டின் புறத்தை புல்லு வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண் டும் என்றார். அதற்கு மூத்தவன்;: ஒரு கிழமையல்ல, அதை ஒரு மாதம் செய்ய வேண்டும், என் றாலும் பரவாயில்லை, ஆனால், தம்பியிடமோ நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினான். அவ னுடைய பதிலானது அவன் பெற்றோருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவன் எப்போது உணர்வடையவான் என்று பெரும் எதிர்பார் ப்போடு காத்திரு ந்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, 'நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்;' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பொதுவாக மனிதர் கள், வெளியரங்கமாக காரியங்களை நடப்பிக்க ஆவலுள்ளவர்களா கவே இருக்கின்றார். அதாவது, தவறாமல் ஆராதனைக்கு செல்வது, குறித்த நேரத்தில் வேதத்தை வாசித்து ஜெபிப்பது, உபவாச நாட்களை அனுசரிப்பது, தசபபாகம் காணிக்கை களை கிரமமாக கொடுப்பது, வறியோருக்கு உதவி செய்வது போன்ற நற்செயல்களை செய்ய ஆய த்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், உன் மனதிலிருக்கும் கசப்பு நீங்க, உன் பிறனை மன்னிப்பாயாக, அல்லது மன்னிப்பை கேட்டுக் கொள்வாயாக என்ற தேவ கற்பனையை கைகொள்வதைவிட மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தில் மூத்தமகனானவன் செய்தது போல, தண்ட னைகளை சகித்துக் கொள்ளவும் மேலும் தங்கள் சரீரங்களை காயப்ப டுத்தி வருத்தவும் தயாராக இருக்கின்றார்கள். மனதிற்குள் மறைந்திருக் கும் பகை, வன்மம், கசப்பு, வைராக்கியம் போன்ற சுபாவங்களை வாழ்க்கையில் தினமும் பயிற்சிவிப்;பதால், தேவ அன்பு இன்னதென்று உணராதபடிக்கு, தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்கின்றார் கள். பிரியமானவர்களே, தேவ அன்பின் கிரியைகளை உங்கள் வாழ்க் கையிலே நடப்பியுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என் மனதும் மாம்சமும் விரும்பிய பரிகார ங்களை செய்யாமல், உம்முடைய வார்த்தையின்படி உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:12