புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2024)

பரம பிதாவின் பாதுகாப்பு

யோவான் 10:29

அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனா லும் கூடாது.


பிரியமான சகோதர சகோதரிகளே, 'கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வ மாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.' (சங்கீதம் 33:12).இந்த உலகத்தில் பொல்லாதவர்களாக இருக்கின்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையானவைகளை கொடுக்கின்றார்கள். அப்படியானால், பரலோக த்திலிருக்கின்ற நல்ல பிதாவானவர் எவ்வளவு அதிகமாக நமக்கு நன் iயான ஈவுகளை கொடுப்பார் என் பதை சிந்தித்துப் பாருங்கள். இன் றைய நாளிலே நம்முடைய பரம பிதாவின் பாதுகாப்பை குறித்து சற்று தியானம் செய்வோம். 'தாயின் வயிற் றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியா னதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங் குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.' (ஏசாயா 46:3-4). ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப் போதும் என்முன் இருக்கிறது. (ஏசாயா 49:15-16). நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக் கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக் கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. (ஏசாயா 43:2). உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சகரியா 2:8). மனிதனுடைய வார்த்தைகளும், பிரபுக்க ளுடைய வாக்குகளும் பூமியிலே அவர்களுடைய வாழ்க்கை காலம் எப்படியிருக்கின்றதோ, அப்டியே அவர்களுடைய வார்த்தைகளும், வாக்குகளும் இருக்கின்றது. மனிதனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம். ஆனால், நம்முடைய பரம பிதாவானவர் எப்போதும் இருக்கின் றவராய் இருக்கின்றார். பலவான் கையிலிருக்கும் பந்தைய பொருளை ஒருவராலும் பறித்துக் கொள்ளக்கூடாது. 'நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.' (சங்கீதம் 100:3). அவரு டைய மேய்ச்சலின் ஆடுகளாகிய நம்மை பிதாவின் கையிலிருந்து பறி த்துக்கொள்ள ஒரு வனாலும் கூடாது.

ஜெபம்:

என் அடைக்கலமும் அரணான கோட்டையுமான கர்த்தாவே, நான் எப்போதும் உம்முடைய சிறகுகளின் மறைவிவே தங்கியிருக்கும்படி எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவேல் 3:16