புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2024)

நல்ல போராட்டதை போராடுங்கள்

1 தெச 5:23

சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக;


ஒரு மாணவனாவன், தேசத்திலுள்ள குறிப்பிட்ட கல்லூரியொன்றிலே அனுமதி பெற்றுக் கொள்ளவதற்காக நுழைவு பரீட்சைக்காக தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தான். குறித்த நாள் வந்த போது, அந்த பரீட்சையை எழுதி, விசேஷ சித்தியுடன் தேர்ச்சி பெற்றதால், அந்த கல்லூரியில் படிப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டான். அவன் உள்ளத்திலே பெரிதான மகிழ்ச்சி. தன் வெற்றியை நண்பர்கள் உறவினர்க ளோடு கொண்டாடினான். பரபரப் போடு அந்த கல்லூரிக்கு சென்றான். அவன் அனுதிப் பரீட்சையில் பெற்ற வெற்றி பராட்டத்தக்கது. ஆனால், அது அவனுடைய இறுதிப் பரீட்சைய ல்ல, அது ஒரு நல்ல ஆரம்பம். ஆகவே, பரீட்சைகளிலே வெற்றி பெற த்தக்கதாக, அவன் கருத்தோடு தன் பாடங்களை அனுதினமும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கொத்தாகவே, நாம் நித்திய அடிமைத்தன கட்டிலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மீட்ப்பை பெற்றுக் கொண்டோம். அந்த நாள் பாக்கிய நாள்! நல்ல ஆரம்பம்! ஆனால், நம்முடைய போராட்டங்கள் அந்த நாளோடு முடிவடைந்து போகவில்லை. போராட்டங்களை நாம் ஜெயம் கொள்வ தற்கு தேவையான ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை, தேவன்தாமே நமக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார். என்றென்றைக்கும் நம்மோடு இரு ந்து, சகல சத்தியத்திலும் நம்மை நடத்தி செல்லும்படிக்கு, ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவிலிருந்த ஆவியை நமக்கு கொடுத்த்திருக்கி ன்றார். 'மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோ டும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைக ளோ டும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவை களை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவ ர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.' (எபேசியர் 6:12-13). போராட் டங்களை கண்டு சோர்ந்து இளைப்படைந்து போகாமல், நித்திய ஜீவனை பெற்று கொள்ளும் நாள் வரைக்கும், சோர்ந்துபோகாமல் நற் கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமை யை யும் தேடுகிறவர்களாயிருங்கள். 'உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழு வதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்ற மற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.'

ஜெபம்:

அழியாமையை தரித்துக் கொள்ள என்னை அழைத்த தேவனே, நான் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8