புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2024)

அன்பின் பிணைப்பு

2 பேதுரு 3:18

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெற்றோரானவர்கள், தங்களுடைய மகனாவனுக்கு ஏற்ற மணமகளை தெரிந்தெடுத்து, திருமணத்திற்காக ஆயத்தங்களை செய்து வந்தார்கள். மணமகனும், மணமகளும் எல்லா விதத்திலும் பொருத்தமுள்ளவர்களாக காணப்பட்டார்கள். இரண்டு குடும்பங்களுக்கிடையிலேயும், பெரிதான வேற்றுமைகள் எதையும் காண்பது அரிதாகவே இருந்தது. திருமணம் மிகவும் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொ ண்டாடிப்பட்டது. திருமணத்திற்கு முன்னும், பின்னும் நடக்க வேண்டிய காரியங்கள் யாவும் ஒழுங்காகவும் நேர்த் தியாவும் நடைபெற்றது. ஆனால், சில ஆண்டுகள் பின்னர் அவர்கள் இருவ ரும் ஒன்றாக வாழ்வதற்கு அவர்க ளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், அழகும், அந்தஸ்தும், ஆஸ்தியும், வெளிப்படையான பொரு த்தங்கள் தாரளமாக இருந்த போதிலும் அவர்களுக்கிடையிலே அன் பின் ஐக்கியத்தை எற்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணமோ, கிரி யைகளோ இல்லாதிருந்ததால், ஒருவரை ஒருவர் அறியும் அறிவிலே வளருவதற்கு பதிலாக, ஒருவர் மற்றவருடைய வேற்றுமைகளை அறிவ திலேயே வளர்ந்து வந்தார்கள். அதனால், அவர்களுடைய வாழ்விலே அநேக காரியங்களிலே ஒருமனமும், ஏகசிந்தையும் காணப்படவில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே இன்று சிலருடைய ஆவிக்குரிய வாழ்வும் இப்படிப்பட்ட திருமணத்திற்கு ஒத்தாகவே காணப்படுகின்றது. வெளிப்;படையாக நடத்தப்படும் கிரியைகளை பார்க்கும் போது, இவ ர்கள் கிறிஸ்துவை தரித்தவர்கள் போல காட்சியளிக்கின்றார்கள். அவரு டைய நாமத்தை கூறிக் கொள்கின்றார்கள். வாழ்க்கையை கெடுக்கும் தவறான பழக்கவழக்கங்கள், களியாட்டங்கள் முதலான வைகள் இவர்கள் வாழ்விலே இல்லாதிருந்த போதிலும், கிறிஸ்துவை அறியும் அறிவிலே வளர வேண்டும் என்ற எண்ணமோ அதற்குரிய பிர யாசங்களோ அவர்கள் வாழ்விலே இல்லை. அதனால் அங்கே, தேவ அன்பின் பிணைப்பு அவர்களிடத்தில் இல்லை. மணவாளனாகிய கிறி ஸ்து என்றும் மாறாதவராகவே இருக்கின்றார். மணவாட்டி சபையாகிய நாமோ, அவர் முன்னிலையில் கறைதிறையற்றவர்களாக காணப்படும் படிக்கு, நாளுக்கு நாள் அவரை அறியும் அறிவிவே வளர்ந்து பெருக வேண்டும். கிறிஸ்துவிலிருந்த சிந்தையிலே வளரும்படிக்கு, தேவ சமுகத்திலே உங்களை தாழ்த்தி ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

கிறிஸ்துவின் சாயலிலே வளரும்படிக்கு என்னை வேறு பிரித்த தேவனே, என் ஆத்துமா எப்போதும் உம்மை வாஞ்சித்து, உமது வழிகளிலே பிரியமாக இருக்கும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:27

Category Tags: