புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2024)

கிருபையும் பிரயாசமும்

1 கொரிந்தியர் 15:10

ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை;


பரிசேய சிறப்பு வர்க்கத்தைச் சேர்ந்த சவுல் என்னும் மனிதனானவர், மத வைராக்கியத்திலே மிகவும் உறுதியுள்ளவராக வாழ்ந்து வந்தார். அக் காலத்திலிருந்த மத சட்டதிட்டங்களின்படி குற்றம்சாட்டப்படாத அவர், கல்வியறிவுடையவரும், சமூக அந்தஸ்துள்ளவரும், அதிகாரிகள் மத்தி யிலே செல்வாக்குடையவருமாக இருந்தார். ஆனால், அவருடைய பார் வையின்படி, ஆண்டவர் இயேசுவின் சீஷர்களை சிறைப்பிடித்து, சபை யை துன்பப் படுத்துவது அவ ருக்கு நீதியாக காணப்பட்டது. அவருடைய நம்பிக்கையின் படி, அவர் எதிர்பார்த்திருந்த உலகத்தின் இரட்சகராகிய இயேசுவை அறியாதபடிக்கு, மாம்ச சிந்தையினாலே உண்ட hயிருந்த அவருடைய பெலன் அவர் மனக்கண்களை குருடா க்கிவிட்டது. முள்ளில் உதைப்பது தனக்கு கடினமானது என்று உணரா தவராக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை துன்படுத்தினார். சட்டதிட் டங்கள், மதக் கொள்கைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு அரும்பாடு பட்டார். அந்த பிரயாசத்தின் முடிவு அழிவு என்பதை உணராமல், மேலும் கிறிஸ்தவர்களை சிறை பிடிக்கும்படி சென்று கொண்டிருந்த வேளையிலே, வழியிலே, ஆண்டவர் இயேசுவை அவர் சந்தித்தார். அவருடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது, இயேசு ஆண்டவர் என்பதை அறிந்து கொண்டார். அந்நாள் முதல், கிறிஸ்து இயேசுவின் சுவிசேஷ த்திற்காக அதிகமாக பிரயாசப்பட்டார். இந்த பிரயாசமானது கிறிஸ் துவை அறியாத நாட்களிலே நடப்பிக்கப்பட்ட கிரியைகளைப் போலல் லாது, அவர் பெற்றுக் கொண்ட தேவ கிருபையினாலே சாத்தியமானது. பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ சித்தத்தை நிறைவேற்றுவ தற்கு மத வைராக்கியம், கல்வியறிவு, அந்தஸ்து, பொருளாதார செழி ப்பு, செல்வாக்கு போன்றவை மட்டும் இருந்தால் போதாது. இவை களை நாடி, இவைகளின் மேல் நம்பிக்கையாயிருக்கின்ற மனுஷர்களின் வாழ்விலே பல கிரியைகள் இருந்தாலும், அவர்கள் சுயநீதியையே நடப் பிப்பதால், அவர்கள் தேவகிருபையை விருதாவாக்கின்றவர்களாகவே வாழ்ந்து விடுகின்றார்கள். அதனால் துன்பங்ளையும் வேதனைகளையும் உண்டாக்கி விடுகின்றார்கள். நீங்களோ அப்படியிராமல், உங்கள் வாழ் வில் தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறி கிற அறிவினால் கிருபையிலும் சமாதானத்திலும் பெருகுங்கள்.

ஜெபம்:

கிருபையினாலே என்னை இரட்சித்த தேவனே, உம்முடைய சித்தத்திற்கு விரோதமாக நான் மாம்சத்திலே செயற்பட்டு, துன்பங்களை ஏற்படுத்தாதபடிக்கு என்னை உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:2

Category Tags: