புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2024)

மாம்சத்தின் பார்வை

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;


மோசேயாவன் பிறந்த போது, அவன் திவ்விய சவுந்தரிமுள்ளவன் என்று அவன் பெற்றோர் கண்டு கொண்டார்கள். எகிப்தின் சகல சாஸ்திர ங்களிலும் கற்பிக்கப்பட்ட அவனுக்கு, சுகபோகமான வாழ்வு அமைந் திரு ந்தது. ஆனாலும், அடிமைத்தனத்திலே துன்புறுத்தப்படும் தன் ஜனங்க ளைக் குறித்த பாரம் அவன் மனதிலே இருந்தது. எகி ப்தை அரசாண்ட பார்வோனினால் அவன் அறியப் பட்டவனாக இரு ந்தான். பெய ரும், புகழும், கல்வியும், செல் வமும் அவனுக்கு தராளமாக இருந்தது. அவன் சரீரத்திலே பெலன் இருந்தது. அவனோ, அடிமைத்தனத்திலிருக்கும் தன் ஜனத்தின் காரியங்களை தன் கரத்திலே எடுத்துக் கொண்டு, தனக்கிருந்த பெலத்தின்படி அவற்றை தீர்த்து வைக்கும்படி கிரியைகளை நடப்பித்தான். அதனால், அவன் தன் உயி ரைக் காத்துக் கொள்ளும்படிக்கு எகிப்து தேசத்தைவிட்டு தப்பி ஓட வேண்டியதாயிற்று. மோசேயானவனின் ஆரம்பி நாட்களை சுருக்கமாக நாம் பார்ப்போமென்றால். அவன் வாக்கிலும் செயலிலும் வல்லவனா யிருந்தான். அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமாக இரு ந்தான். அதே வேளையில் அடிமைத்தனத்திலிருந்த தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் விடுதலையடைய வேண்டிய தேவை அங்கே இருந்தது. தன் ஜனங்களைக் குறித்த பாரம் அவன் மனதிலிருந்தது. அப்படியானால், அவன் நடப்பித்த கிரியை களில் தவறு என்ன? கர்த்தருடைய திட்டமானது, கர்த்தருடைய வேளை யிலே, அவருடைய சித்தப்படி நிறைவேறும். அதற்கு முந்தினதோ அல்லது பிந்தினதோ, அவரால் உண்டானதல்ல, மாறாக மனிதர்களு டைய மாம்ச எண்ணப்படி உண்டானது. நாற்பது வருடங்ளுக்கு பின், மோசேயானவன், தன்னால் இனி ஒன்றும் கூடாது என்ற நிலை மையிலிருந்த போது, தேவனாகிய கர்த்தர்தாமே அவனை அழை த்தார். அவன், தன் மனித பெலத்தி னாலும், உலக ஞானத்தினாலும் செய்யக் கூடாத படியிருந்த காரியத்தை தேவ கிருபையினாலே செய்து முடித் தான். எனவே நீங்கள் எத்தகைய அழைப்பை பெற்றிருந்தாலும், எவ்வளவு தகுதியுடையவர்களாக இருந்தாலும், தேவனுடைய வழிநடத் துதலுக்காக காத்திருங்கள். சகலதையும் அறிந்த தேவன் தாமே தாம் முன்குறித்த நேரத்திலே, சகல காரியங்களையும் நேர்த்தியாயும் செம் மையாயும் நிறைவேற்றி முடிப்பார்.

ஜெபம்:

அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கும் தேவனே, என் வாழ்வில் நீர் நியமித்திருக்கும் திட்டமானது, உம்முடைய நேரத்திலே, உம்முடைய சித்ததப்படி நடத்தி முடிக்க என்னை வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:11