புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2024)

'உனக்கிருக்கும் பெலன்'

பிரசங்கி 1:3

சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?


மனித பெலத்தினாலே நடப்பிக்கப்படும் கிரியைகளில் பலன் ஒன்று மேமில்லை என்று கூறிவிடமுடியாது. சூரியனுக்கு கீழே மனிதன் படும் பிரயாசங்களில் பலன்;கள் உண்டு, ஆனால் அந்த பலன்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் அந்த பலன்களின் முடிவு இன்னதென்ப தையும் ஆராய்ந்து பார்க்க முடி யும். ஒரு நகரத்திலே வாழ்ந்து வந்த மனிதனானவன், கடற்கரை யின் அருகான பிரதேசத்திலே, தன க்கென்றொரு மாளிகையை கட்டி னான். அந்த மாளிகையை கட்டு வதற்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக அநேக ஆண்டு கள் பிரயாசப்பட்டான். அந்த மாளிகையானது அழகாக காட்சியளித்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், அவன் வாழ்ந்து வந்த நகரத்தை தாக்கிய கடும் புயல்காற்றினால், அந்த மாளிகையானது முற்றாக அழிந்து போய் விட்டது. அந்தக் கட்டினடமானது, கட்டிட பொறியிலாளர்களின் திட்டத்தி ன்படி, ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது. கட்டிடத் துறையிலே அறிவும், அனுபவமுமிக்க வேலையாட்கள் அந்த மாளி கையை கட்டுவதறகாக வேலைக்கமர்த்தபட்டிருந்தார்கள். அவர்கள் யாவரின் பிரயாசத்திலும் பலன் உண்டாயிருந்தது. விஞ்ஞான துறை யிலே தேர்ச்சி பெற்றவர்கள், அந்த நகரத்தை நோக்கி வரும் பாதக மான காலநிலையை குறித்து முன்னறிவித்திருந்தார்கள். ஆனால், ஒன் றும் அந்த மாளியையை புயலினின்று பாதுகாப்பதற்கு உதவி செய்ய வில்லை. அவன் தன்னுடைய பிராயசத்தையும், அதனால் தனக்குண்டா னவைகள் யாவற்றையும் இழந்து போனான். அழிவுள்ளவைகளை தேடும் மாந்தர்கள் எவரும் இந்த நியதிகளுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். ஆதலால், சூரியனுக்கு கீழே மனுஷன் படும் பிரயாசம் விருதா என்று பிரசங்கி கூறுகின்றார். அவை யாவும் குறித்த காலத்திலே, அறி யாத நேரத்திலோ முடிவுக்கு வரும். ஆனால், தேவனுடைய சித்தத்தை தங்கள் வாழ்வில் எப்போதும் நிறைவேற்றுவர்கள் ஒரு போதும் அசை க்கப்படுவதில்லை. மாறிப்போகும் உலகத்தைப் போல அவர்கள் மனம் மாறிப்போவதில்லை. அவர்கள் ஆபத்துக் காலத்திலே மனம் பதறி நிலை தவறிப் போவதுமில்லை. உயர்விலும் தாழ்விலும் வேதனையிலும் சோத னையயிலும், அசையாமல் தேவ வார்த்தையிலே நிலைத்திருப்பார்கள். முடிவிலே, அவர்கள் நிலையான தேவ ராஜ்யத்திலே நீடித்திருப்பார்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் வல்ல தேவனே, என் சுய புத்தியின்மேல் சாரமலும், உலக மனிதர்கள் அமைத்த வழிகளில் செல்லாமலும், உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 16:3