புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2024)

தேவ கிருபையிலே பலப்படுங்கள்

2 தீமோத்தேயு 2:1

ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.


'இது என்னுடைய கொள்கை, நான் மற்றவர்களைப் போல அப்படி எல் லாம் செய்ய மாட்டடேன், என்னுடைய தகைமைகள் உங்களுக்கு தெரியாதா? இந்த வேலைகளை செய்து முடிப்படிதற்கு எனக்கு தேவை க்கு மிஞ்சிய அனுபவம் உண்டு, நான் எப்போதுமே நற்கிரியைகளை குறித்த எண்ணமுள்ளவனாக இருக்கின்றேன்.' இப்படியாக விசுவாசிகள் கூறுவதை நாம் கேட்டிருகின் றோம். அப்படி கூறாவிட்டாலும் அத் தகைய எண்ண்ங்கள் சிந் தைகள் நம்மில் தோன்றுவதுண்டு. இத்தகைய கூற்றுக்களை சில வேளைகளிலே நாம் பெருமைக் காக கூறாவிட்டாலும், நம் வாழ் விலே நம்மை அறியாமல் வழக்கமாக மாறிவிடுகின்றது. வேறு சில சந் தர்ப்பங்களிலே, நாம் நம்முடைய கல்வி, வேலை, செல்வாக்கு, அந்த ஸ்து, செல்வம் போன்றவற்றை குறித்து அலட்டிக் கொள்ளாவிட்டாலும், மற்றவர்கள் நம்மைக் குறித்து கூறும் பாராட்டுகள், இவைகளை மைய மாக கொண்டதாகவே காணப்படுகின்றது. சுருக்கமாக கூறப்போனால், சிலர் அறிந்தோ அறியாமலோ, இந்த உலகத்திலுள்ள அழிந்து போகும் காரிய ங்களே தங்களடைய பெலன் என்றும், அவைகளால் நாம் எதை யும் சாதித்துவிடுவோம் என்றும் எண்ணி விடுகின்றார்கள்;. நாமோ எப் போதும், கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையிலே பலப்படுகின்றவர் களாக காணப்பட வேண்டும். நம்முடைய சிந்தை, சொல், செயல் யாவும், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக காணப்பட கூடாது. தேவ ஊழியராகிய பவுல், அந்நாட்களிலே இருந்த மனிதர்களில், இந்த உலகத்தின் அளவு கோலின்படி ஒரு பெரும் கல்விமானும், சமூக அந்தஸ்துள்ளவரும், மதவைராக்கிமுள்ளவரும், சட்டதிட்டங்களின்படி எந்த குற்றமும் செய்யாதவருமாக இருந்தார். ஆனால், அவர் ஆண்டவராகிய இயேசுவை அறிந்த போது, தன்னிடமுள்ளவைகள் யாவும் நஷ்டமும், குப்பையுமாக கருதிக் கொண்டார். 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.' என்று அறிக்கை செய் தார். தன் குறைவுகளிலே தேவ கிருபை நிறைவாக இருக்கின்ற இர கசியத்தை தெளிவாக உணர்ந்து கொண்டார். ஆதலால், அவர் வழிநடத்தி வந்த கர்த்தருக்குள் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவை நோக்கி: நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையிலே பெலப்படு என்று ஆலோசனை கூறினார். அதே போல நாமும் எப்போதும் தேவ கிருபையிலே பெலப்படுகின்றவர்களாக காணப்படுவோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் ஒருபோதும் இந்த உலகத்தினாலே உண்டாகும் மேன்மைனயான காரியங்களிலே மேன்மை பாராட்டல், உம்முடைய கிருபையை பற்றி வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9