புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2024)

உங்களுக்கு சமாதானம்

யாக்கோபு 4:6

ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறாரென்று சொல்லியிருக்கிறது.


'வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமா தானம் என்றார்' (யோவான் 20:19). நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு, மரணத்தையும் பாதா ளத் தையும் ஜெயங் கொண்டு உயி ர்தெழுந்த இந்தக் நாளை நினைவு கூரும் இந்நாளிலே, கர்த்தர் நமக்கு கொடுத்த மனச்சாமாதானம் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நிலையாக இருக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப நாட்களிலே நன்றாய் ஓடிய சில விசுவாசிகளின் மனதிலே, பாதி வழியிலில் ஏன் சந்தேகங்களும், குழப்பங்களும் தோன்றுகின்றது? மேலான இரட்சிப்பை கிரு பையினாலே பெற்றுக் கொண்டதை மறந்து, தங்கள் கிரியைகளினாலே வாழ்வின் போராட்டங்களை ஜெயம் கொள்ள முயற்சிக்கும் போது, அவர்கள் தங்கள் மனதிலே பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். உண்மையான மனம்வருந்தலும், மனம்திரும்புதலும் ஒரு விசுவாசியின் மனதிலே உண்டாகும் போது அங்கே மனத்தாழ்மையோடு கூடிய நிபந்தனையற்ற கீழ்ப்படிவு உண்டாகின்றது. அப்படிப்பட்ட இருதயமானது, தேவனுடைய வார்த்தையாகிய விதை வளர்ந்து பலன் கொடுக்கும் நல்ல நிலமாகவே இருக்கின்றது. ஆனால் ஒரு விசுவாசியானவனின் வாழ்விலே தன் கிரியைகளினால் உண்டாகும் சுயநீதி தலைதூக்கும் போது, பெருமையினால் உண்டாகும் அகங்காரம் அவன் மனதிலே குடிகொள்கின்றது. அங்கே மனக்கடினம் உண்டாகின்றது. ஆனாலும், ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று தன் ஏக சுதனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பிய பிதாவாகிய தேவன்தாமே, நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். இது இன்னும் மனந்திரும்பாத மனிதர்களை குறித்தது மட்டுமல்ல, மனந்திரும்பிய பின்மறுபடியும் தங்கள் மனங்களை கடினப்படுத்தி கொண்டிருக்கும் விசுவாசிகளுக்குமுரியதாகும். நீங்களோ, எப்போதும் மனந்திரும்புகின்ற மனதையுடையவர்களாக இருங்கள். எந்த காரியத்தைக் குறித்தும் பெருமையடையாதபடிக்கு, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள். கிருபை நிறைந்த தேவன் உங்களை தமது விருப்பம் போல் நடத்தி, முடிவிலே மகிமையிலே சேர்த்துக் கொள்வாராக.

ஜெபம்:

பாவ சாபத்திலிருந்து என்னை விடுதலையாக்கிய தேவனே, நான் உம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட சமாதானத்தை காத்துக் கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9

Category Tags: