தியானம் (பங்குனி 30, 2024)
விடுதலை எதனால் உண்டானது?
எபேசியர் 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனாவன், பல ஆண்டுகளுக்கு முன் பதாக, தப்பித்துக் கொள்ளமுடியாத பெருங்குற்றமொன்றிலே ஊராரின் கையிலே அகப்பட்டிருந்தான். ஊரின் மூப்பர் சங்கமானது அவனு டைய குற்றத்தை விசாரிக்க கூடிவருதற்கு முன்னதாக, அவன் தன் குற் றத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று அவர்கள் காலிலே விழுந்து மன்னிபபை கேட்டு, அவர்க ளுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு தன்னால் முடிந்த உத விகளை செய்வதாக வாக்குக் கொடு த்தான். மூப்பர் சங்கமானது கூடி வந் தபோது, அவனுடைய மனம்வருந் தலை அவர்கள் கண்டு, அவனுடைய குற்றத்தை அவனுக்கு மன்னித்து விட் டார்கள். காலங்கள் கடந்து சென்று, அவன் திருமணமாக தன் சொந்தக் குடும்பத்தாரோடு வாழ்ந்து வந்தான். அவனுடைய மகனானவன், வாலிப பருவத்தை அடைந்தபோது, அவ னும் ஒரு குற்றத்திலே அகப்பட்டுக் கொண்டான். அவனுடைய தகப்பனான வனோ, மூப்பர் சங்கத்தின் முன்னிலையிலே நின்று, தன் மகனானவனு டைய குற்றத்தை மறைப்பதற்காக, தனக்கு ஆதாரமான சாட்சிகளை ஏற்படுத்துக் கொண்டு, குற்றம் செய்த மகனானவன் நிரபராதி என்று நிரூபித்து, அந்த வழக்கிலே வெற்றி பெற்றுக் கொண்டான். அந்தத் தக ப்பனானவன், பல ஆண்டுகளுக்கு முன் தனக்குண்டான தயவை மறந்து போனான். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம்; தேவனை அறியா மல் அக்கிரம செய்கைக்காரராக இருந்தபோது, தேவ கிருபையினாலே, விசுவாசத்தைக் கொண்டு பெரும் விடுதலைiயை இலவசமாக பெற் றுக் கொண்டோம். அந்த விசுவாசத்திலே மனத்தாழ்மையும் கீழ்படிவும் உண்டாயிருந்தது. ஆனால், காலங்கள் கடந்து செல்லும் போது, சிலர் அந்தத் தகப்பனானவனைப் போல, தங்கள் வாழ்க்கையிலே உண்டா கும் போராட்டங்களை, மாம்சத்திலே எதிர்வாதம் செய்து, சாதூரியமாக தங்களை நீதிமான்களாக காண்பிக்க முயற்சி செய்கின்றார்கள். ஒரு வேளை மனிதர்களுடைய சங்கத்தின் நடுவிலே நாம் எதையும் வென்று கொள்ளலாம் ஆனால் கர்த்தருடைய பிரகாரங்களிலே யார் நீதியைக் குறித்து வாதாட ஜெயிக்க முடியும்? அவருடைய சமுகத்திலே மனந் திரும்புதல் இல்லாமல், பாவ மன்னிப்பு உண்டாகுவதில்லை. இருதய ங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் மனிதர்களுடைய சிந்தையை அறிந் திருக்கின்றார். எனவே தேவ கிருபையை பெற்றுக் கொள்ளும்படிக்கு அவருடைய சமுகத்திலே நம்மைத் தாழ்த்தி ஒப்புக் கொடுப்போமாக.
ஜெபம்:
அன்பின் தேவனே, என் சொந்த பெலத்தினாலே பாவங்களை மேற்கொள்ள மறுபடியும் முயற்சி செய்யாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே தேவ பயத்தோடு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:24