புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 29, 2024)

வாழ்வின் மேன்மை

கலாத்தியர் 6:14

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;


அக்காலத்த்திலே வாழ்ந்து வந்த ஜனங்களில் சிலர், பரிசேயர் வேத பாரகர், சதுசேயர், நாட்டின் அதிகாரிகள் என்று பற்பல பிரிவுகளையு டைய சிறப்பு குடிமக்களாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தாங்கள் கற் றவர்கள், மதவைராக்கியமுடையவர்கள், சட்டத்தை அமுல்படுத்து கின் றவர்கள், நியாயம் விசாரிக்கின்றவர்கள் என்று தங்கள் தங்கள் கொள் கைகளையும், நம்பிக்கைகளையும் குறி த்து மேன்மை பாராட்டி வந்தார்கள். இப் படியாக, தங்கள் தகுதிகளை குறித்து பெருமை பாராட்டி வந்த அவர்களு டைய கல்வி அறிவும், மத வைராக்கி யமும், சமூக அந்தஸ்தும், அதிகாரமும், அவர்களுடைய மனங்களை, கடினப்ப டுத்தியதால், பாவமறியாத இயே சுவை சிலுவையில் அறைவதற்கு அக்கிரமசெய்கைக்காரரோடு இசை ந்து கொண்டார்கள். (அப் 2:36, 4:10). உலகத்தினாலும், மாம்ச சிந்தையினாலும் உண்டாகும் அறிவினால் ஒரு வரும் மெய்யான தேவனை அறிந்து கொள்ள முடியாது. முன்னொரு காலத்திலே நாமும் அப்படிப்பட்ட நிலைமையிலே வாழ்ந்து, நம்முடைய வழிகளை குறித்து நாமே மேன்மை பாராட்டி வந்தோம். அந்த வழிகள் விசாலமானவைகள். அந்த வழிகள் இந்த உலகத்தின் அங்கீகாரத்துக் குரியவைகளாக இருந்தது. ஆனால், அவைகளின் முடிவோ அழிவு என்று வேத வார்த்தைகள் கூறுகின்றது. நாம் அழியாமையை அடைந்து கொள்வதற்காக, பரலோகம் செல்லும் வழியை காண்பிக்கும் படிக்கு ஆண்டவராகிய இயேசு இந்த பூமிக்கு வந்தார். பரிசுத்தராகிய இயேசு, மனித குலத்தின் பாவங்களை தன்மேல் சுமந்து, அதற்குரிய பரிகாரத் தை செலுத்தினார். அவருடைய நாமத்தை விசுவாசிப்பவர்கள் யாவருக்கும்; நித்திய வாழ்வை அடையும் ஜீவவழியை உண்டு பண்ணினார். பிரிய மானவர்களே, ஒருவேளை நீங்கள் ஆண்டவர் இயேசுவை அறியாதவர் களாக இருந்தால், நீங்கள் எந்த நிலைமையிலிருந்தாலும், நித்திய ஜீவ னை பெற்றுக் கொள்ளும் படிக்கு, இன்று உங்கள் வாழ்க்கையை அவ ரிடம் ஒப்புக் கொடுங்கள். நீங்கள் ஆண்டவரை அறிந்தவர்களாக இருந் தால், இந்த உலகத்தினாலும், மாம்ச சிந்தையினாலும் உண்டான பிரிவு கள், உயர்வுகள், கிரியைகளைக் குறித்து மேன்மைபாராட்டி, மனதைக் மறுபடியம் கடினப்படுத்திக் கொள்ளாமல், இந்நாளிலே உங்கள் வாழ் க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதும் மனத்தாழ்தை யோடு, கிறிஸ் துவின் சிலுவையை குறித்தே மேன்மை பாராட்டுங்கள்.

ஜெபம்:

என்மீது அன்பு கூர்ந்த தேவனே, நான் மறுபடியும் என்னை மெச்சிக் கொள்ளாதபடிக்கு, உம்முடைய கிருபையினாலே உண்டான இரட்சிப்பை உயர்ந்தும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 1:6