புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2024)

மனதிலுள்ளவைகளை அறிந்தவர்

லூக்கா 22:42

ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம் முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.


'இவர்கள் எவ்வளவு கற்றாலும் திருந்தாத ஜனங்கள், எத்தனை நன்மைகளை பெற்றுக் கொண்டாலும் நன்றியற்ற மனதையுடையவர்கள். நான் நன்மை செய்து பட்ட பாடுகள் போதும்' என்று சில விசுவாசிகள் சொல்வதை கேட்டிருக்கின்றோம். அப்படி சொல்லவிட்டாலும், அப்படிப் பட்ட எண்ணங்கள் மனதில் தோன்றுவதுண்டு. அதனால், சிலர், தங்கள் மனதை கடினப்படுத்தி விடுவதால், தாங்கள் எதற்காக அழைக்கப்பட்டோம் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். திராட்சை செடியானது, இனி நான் இந்த மனிதர்களுக்கு சுவையான கனிகளை கொடுக்க மாட்டேன் என் றால், அந்த திராட்சை செடியினால் என்ன பலன்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, நம்முடைய உருவம் இன்ன தென்று அவர் அறிவார்; நாம் மண்ணெ ன்று நினைவுகூருகிறார். மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திரு ந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக் கவேண்டியதாயிருக்கவில்லை. தீர்க்கதரிசிகளாலே தன்னைக் குறித்து முன்கூறப்பட்ட காரியங்களை அவர் அறிந்திருந்தார். மேய்ப்பனை வெட் டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே தனனைப் பின்வற்றி வந்த அன்பான சீஷர்களும் தன்னிமித்தம் இடறலடைவார்கள் என்றும் அறிந்திருந்தார். ஆசாரியர்கள், பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் என்பவர்களின் தீமை யான சிந்தைனைகளையும், தன்னோடு உணவுண்டானாகிய யூதாஸ் தனக்கு துரோகம் செய்வான் என்பதையும், பிரதான சீஷனாகிய பேதுரு தன்னை மறுதலிப்பான் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்தார். அப்படியிருந்தும், அவர்களுடைய பெலவீனம் குறித்து நொந்து கொள் ளாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தமானது தன்னில் பரிபூரணமாக நிறைவேறும்படிக்கு, எல்லாருக்காவும் தன்னை பலியாக ஒப்புக் கொடு த்தார். அவர் அதைக் அரை மனதோடேயோ, அல்லது மனக்கசப்போ டேயோ செய்து முடிக்கவில்லை. தன்னை சிலுவையிலறைந்து துன்பப் படுத்தி னவர்களுக்காவும் பரிந்துபேசி அன்போடு ஜெபம் செய்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய மீட்பராகிய இயேசுவின் சிலுவையின் தியாகத்தை தியானிக்கும் இந்த நாளிலே, அவரைப் போலவே, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நம் வாழ்விலே வாஞ்சையோடு நிறைவேற்றி முடிக்க நம்மை அர்ப்பணிப்போமாக.

ஜெபம்:

என்னை வேறுபிரித்த தேவனே, மற்றயவர்களுடைய பெலவீனங்களினாலும், குறைவுகளினாலும் நான் சோர்ந்து போகாதபடிக்கு, பெற்ற பணியை நிறைவான மனதுடன் செய்துமுடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 2:24-25