புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2024)

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் மேன்மை

ரோமர் 6:6

நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.


மலைப் பிரதேசம்; வழியாக ஒரு குறிப்பிட்ட ஊருக்கு சென்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, இனந்தெரியாத சில கொள்ளைக்காரர் வழி மறித்து, அவர்கள் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, வண்டியொன்றிலே அவர்களை கடத்திச் சென்றார்கள். பல மாதங்களாக அந்த வாலிபர்கள் அந்தக் கொள்ளைக்காரரின் அநியாய வேலைகளை செய்யும்படி துன்புறுத்தப்பட்டார்கள். அடிமைத்தனத்திலே வாழ்ந்து வந்த வாலிபர்களுக்கு, கொள்ளைகாரர் தங்கள் அநியாயத்தின் ஆகாரத்தை உண்ணவும், தாங்கள் அருந்திய மதுபானத்திலே அவ ர்களுக்கும் பங்கேற்பதற்கும் எந்த தடையும் இருந்ததில்லை. அநேக நாட்களாக அந்த வாலிபர்களை தேடிச் சென்ற பொலிசார், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அவர்களை விடுதலையாக்கி, அவர்களுடைய ஊருக்கு அவர்களை கொண்டு வந்து, அடிமைத்ததனத்தின் வாழ்விலிருந்து சுதந்திரமாக வாழும்படி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சில நாட்கள் சென்றபின்பு, அந்த வாலிபர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: கொள்ளைக்காரரோடு இருக்கும் போது, நாங்கள் விரும்பியதை உண்ணவும், குடிக்கவும், களிப்பாக இருக்கவும் எந்தத் தடையும் இல்லாதிருந்ததே என்று ஆசையோடு கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் சிறைப்படுத்தப்பட்டு, அடிமைத்தனத்தில் வாழ்ந்தோம் என்பதைக் குறித்து உணர்வற்றவர்களாவே இருந்தார்கள். பிரியமானவர்களே, கிறிஸ்துவை அறியாத நாட்களிலே, நாமும், பாவ சாபங்களின் அடிமைத்தன கட்டிற்குள் வாழ்ந்து வந்தோம். 'அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவு க்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.' (ரோமர் 6:11-13). பழைய வாழ்விற்குரிய அடித்தனத்தின் கட்டுகளை மறுபடியும் இச்சிக்காமல், கர்த்தர் கொடுத்திருக்கும் சுதந்திரத்த்தை மேன்மையயை உணர்ந்தவர்களாக வாழக் காடவோம்.

ஜெபம்:

இருளின் அதிகாரத்தினின்று என்னை விடுவித்த தேவனே, நான் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் மேன்மையை உணரத்தக்கதாக பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எண்ணாகமம் 11:5-6

Category Tags: