புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2024)

முற்காலத்து நற்கிரியைகள்...

கொலோசெயர் 1:20

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,


ஒரு ஊரிலே வாழ்ந்த சில ஜனங்கள், சமாதானமான வாழ்வைத் தேடி தாங்கள் பிறந்த ஊரைவிட்டு வெளியூரொன்றிற்கு சென்று தஞ்சம் புகுந்தார்கள்.சென்றிருந்த சுபீட்சம் அந்த நிறைந்த ஊரிலுள்ள ராஜாவும் அவர்ளை வரவேற்று, அந்த ஊரின் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டார். இந்த சிலாக்கியமானது, அவர்களின் தகுதியடைப்படையிலே அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக அந்த ஊரின் ராஜாவின் தயவி னாலே பெற்றுக் கொண்டார்கள். புதிய ஊரிலிருந்த யாவும் நன்மை க்கேதுவானவைகளாக இருந்தது. ஆனாலும். ஆண்டுகள் கடந்து சென்ற போது, தாங்கள் விட்டுவந்த ஊரிலுள்ள கலச்சாரத்தையும், பாரம்பரியங்களiயும், நல்வழி முறைக ளையும் நாங்கள் பேணிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண் டார்கள். அவர்கள் பிறந்த ஊரிலே இருந்த கலாச்சாரத்திலே நல்ல காரி யங்கள் இருந்தது ஆனால் அந்த நல்ல காரியங்கள் ஒன்றும் அடிப் படைப் பிரச்சனையை தீர்க்கவில்லை. பல தலைமுறைகளாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தினால் அவர்களுக்கு சமாதானம் உண்டாவில்லை. அப் ப டியானால், அந்த பழைய வாழ்க்கை முறைமைகளை சமாதானமுள்ள புதிய வாழ்க்கை முறைக்குள் கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தது. காலப் போக்கிலே, அவர்கள் வந்து தஞ்சமடைந்த புதிய ஊரையும் தங்கள் பழைய ஊரைப் போல மாற்றிவிட்டார்கள். பிரியமான சகோதர சகோ தரிகளே, 'முற்காலத்திலே இவ்வுலக வழக்க த்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப் பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்.' அந்த வாழ்க்கை முறைமையிலே சில நன்மைகள் இரு ந்தபோதும், அவைகள் நம்முடைய அடிப்படைப் பிரச்சனையை தீரக்க வில்லை. நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாகவே இருந் தோம். இப்போது ஆண்டவராகிய இயேசு சிலுவையின் சிந்தின இரத்தத்தி னாலே பரலோக சமாதானத்தை பெற்றுக் கொண்டோம். மறுப டியும், பழைய பாரம்பரிய, கலசாச்சார, நற்கி ரியைகளினால் நாம் பெற்றுக் கொண்ட சமாதானத்தை இழந்து போய்விடாதபடிக்கும், தேவனுடைய கிருபையை விருதாவாக்காதபடிக்கும் எச்சரிக்கையுள்ளவர்களாக இரு க்க வேண்டும். நீதியானது நம்முடைய பழைய பாரம்பரிய கிரியை களினாலே உண்டாகுமென்றால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

ஜெபம்:

இளைப்பாறுதல் தரும் தேவனே, என்னை சூழ்ந்து கொள்ளும் பிரச்சனைகளை கண்டு நான் கலங்கி தவிக்காதபடிக்கும், உம்முடைய வார்த்தையை அறிக்கையிடுகின்றதில் உறுதியாய் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 1:6