புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2024)

உபவாசத்தின் எண்ணமும் நோக்கமும்

அப்போஸ்தலர் 13:2

அவர்கள் கர்த்தருக்கு ஆரா தனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார்.


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, 'அந்தியோகியா பட்டணத்தி லுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களா யும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசி த்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபா வையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித் துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியா னவர் திருவுளம்பற்றினார். அப்பொ ழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவ ர்கள்மேல் கைகளை வைத்து, அவர் களை அனுப்பினார்கள்.' உபவாசமும் ஜெபமும் பரிசுத்தவான்களின் வாழ் விலே முக்கியமான காரியங்களாக இருந்து வருகின்றது. தங்கள் மாம் சத்தின் எண்ணப்படி முடிவுகளை எடு க்காமல், தேவ சித்தமானது பரலோ கத்திலே செய்யப்படுவதைப் போல, பூலோகத்;திலும் நடத்தி முடிப்பதே அதன் முதன்மையான நோக்கமாகயிருந்தது. சிலர், உபவாச நாட்களிலே, உபவாச காணிக்கைகளை சேகரித்து அதை தர்ம பணமாக, ஏழை எளி யவர்களுக்கு வழங்கி வருகின்றார்கள். அது ஒரு நல்ல கிரியை. இந்த தர்ம காணிக்கையை கிஸ்த்துவை அறிந்தவர்கள் மட்டுமல்ல, அவரை அறியாத வேறு சிலரும் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். அப்படி யானால் நாம் நடத்தும் கிரியைகளின் மேன்மை என்ன என்பதை சிந்தி த்துப் பாருங்கள். அக்காலத்திலே ஆண்டவர் இயேசுவின் அப்போஸ் தலர்கள் உபவாசித்து ஜெபித்தார்கள் எனவே நானும் உபவாசித்து ஜெபிப்பேன் என்று ஒரு நோக்கமும் வழிநடத்துதலுமில்லாமல் உப வாச நாட்களை அனுசரிக்கக்கூடாது. இந்த பகுதியிலுள்ளவர்கள், இத் தனை பத்து நாட்களாக உபவாசிக்கின்றார்கள், மற்றய பகுதியினர் இரு பது நாட்களாக உபவாசிக்கின்றார்கள், எனவே நாமும் சபையாக உப வாசிப்போம் என்னும் எண்ணமானது நோக்கமற்றதும் தவறானது மாக இருக்கும். மற்றவர்களுடைய கட்டுக்களும், நுகத்தடிகளும் உடை க்கப்பட வேண்டும் என்ற நோக்கம் நல்லது. ஆனால் நாம் பெற்றுக் கொண்ட விடுதலையை கிறிஸ்துவுக்குள் நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்காக என்னை அழைத்த தேவனே, நான் என் அழைப்பின் பிரதான நோக்கத்தை ஒருபோதும் மறந்து போய் விடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எஸ்றா 8:23

Category Tags: