தியானம் (பங்குனி 21, 2024)
தேவனிடத்தில் ஐசுவரியமுள்ளவர்கள்
1 தீமோத்தேயு 6:18
நற்கிரியைகளில் ஐசுவரிய வான்களாகவும்,
ஒரு குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று வந்த ஐசுவரியவானின் வியா பாரமானது நன்கு விருத்தியடைந்தால், அவன் வசித்து வந்த ஊரிலுள்ள பல பயிர் நிலங்களையும், கட்டிடங்களையும் தனக்கு சொந்தமாக வாங் கியிருந்தான். அவன் பிள்ளைகளுக்கும், அவர்களுடைய சந்ததிக்கும் வேண்டிய செல்வத்தை சேகரித்து வைத்திருந்தான். பிள்ளைகளும், அவ னுடைய வியாபார ஸ்தாபனங்களிலே உத்தியோகத்திலிருந்து, பெருந்தொகையான சம்பளங்களை எடுத்து வந் தார்கள். தான் சென்று வந்த ஆலயத்திற்கு காணிக்கைகளை கொடு த்து, நற்பெயரை பெற்றிருந்தான். அந்த ஐசுவரியவான் வசித்து வந்த தெருவிற்கு அப்புறமாக ஒரு சிறிய குடிசையிலே வசித்து வந்த விசுவாசியொருவன், எளிமையான சபையொன்றிற்கு சென்று தேவனை ஆராதித்து வந்தான். தன் குடும்பத்தின் தேவைகளை சந்திப்பதற்கு கடுமையான உழைத்து வந்தாலும், அவனுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாதிருந்தது. மழை காலத்திற்கு முன் வீட்டின் கூரையை மேய்வதற்கு அவனிடம் பணமில்லாதிருந்தது. இப்படியாக தெருவின் அப்புறமாக வசித்து வந்த அந்த விசுவாசியானவனின் குடும்பமானது, அப்படைத் தேவைகளை சந்திக்க முடியா மல்? வறுமையிலே வாழ்ந்து வருகின்றார்கள் என்று அந்த ஐசுவரியவானானவன் அறிந்திருந்தும், அறியாதவனைப் போல தன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தான். இருவரும் ஒருநாள் ஆண்டவர் இயேசு வின் சமுகத்திலே நிற்க வேண்டும். அந்த நாளிலே அந்த ஐசுவரிய வானானவன் ஆண்டவர் இயேசு முன்னிலையிலே என்னத்தை கூறிக் கொள்ள முடியும்? நான் என்ன செய்வேன்? வியாபாரம் ஆசீர்வதிக்கப்பட்டது. எனவே, என் பண்டகசாலைகளை இடித்து பெரிதாக்கக் கட்டி, எனக்கும் என் சந்ததிக்கும் வேண்டிய பொருட்களை அங்கே சேமித்து வைத்தேன் என்று கூறிக் கொள்ளலாமோ? பிரியமானவர்களே, இந்த உலக ஐசுவரியத்தின் பெருக்கம் இறுமாப்பை உண்டு பண்ணும். அதை தங்களுக்கென்று சேர்த்து வைக்கின்றவர்களின், மனசாட்சியா னது சூடுட்டுண்டு போகும். நீங்ளோ 'நன்மை செய்யவும், நற்கிரியை களில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்தியஜீவனைப் பற்றிக் கொள் ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கி ஷமாக வைத்திருக்க நாடுங்கள்'. தேவனிடத்திலே ஐசுவரியமுள்ள வர்களாக இருங்கள்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, நான் எனக்கென்று பொக்கிஷங்களை சேர்த்து வைக்காமல், உம்மிடத்தில் ஐசுவரியமுள்ளவனாக வாழும்படி உணர்வுள்ள இருயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:19-21