புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2024)

கிறிஸ்து இல்லாமல் ஐக்கியம் ஏது?

1 தீமோத்தேயு 2:4

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறி கிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.


ஒரு ஊரிலே சில ஆண்டுகளாக இயங்கி வந்த காப்புறுதி நிறுவனத்திற்கு, ஈடு கொடுக்கும் வகையில், வேறொரு புதிய காப்புறுதி நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ளும்படிக்கு ஏட்டிக்கு போட்டியாக இந்த இரண்டு நிறுவனங்களும் அயராது உழைத்து வந் தார்கள். ஆண்டுகள் கடந்து சென்றதும், இரண்டு நிறுவனங்களும் கணிசமான அளவு வாடிக்கை யாளர்களை தம் வசப்படுத்திக் கொண்டதாhல், அவர்களுடைய வியாபாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்ததது. அத்தருணத்திலே, அந்த இரண்டு ஸ்தாபனத்தின் நிர் வாகிகளும் ஒன்றுகூடி, இரண்டு ஸ்தாபனங்களுக்கும் போதுமான வாடி க்கையாளர்கள் இருக்கின்றார்கள் எனவே இனி நாம் எதிராளிகளாக இல்லாமல், நியாயமான வியாபார நெறிமுறைகளை கையாளுவோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்திலே இயங்கி வரும் வியாபார ஸ்தாபனங்கள் இத் தகைய வழிமுறைகளை கையாண்டு வருகின்றார்கள். மேலானவை களை தேடும்படிக்கு அழைக்கபட நாம், உன்னதமானவருக்கு ஊழியம் செய்துவருகின்றோம். இது போட்டியோ, வியாபாரமோ அல்ல. நற் செய் தியானது முழு உலகத்திற்கும் அறிவிக்கப்பட வேண்டும். எல்லாரும் இரட்சிப்படைய வேண்டும் என்று பிதாவாகிய தேவன் தாமே சித்தமு ள்ளவராக இருக்கின்றார் (1 தீமோ 2). ஆனால், இன்று தங்களை கிறிஸ்துவுடையவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் கிறிஸ்துவை அறியாமல் அந்தகார இருளில் வாழும் ஜனங்களுள்ள கூட்டங்களோடு, நல்லிணக்க ஐக்கிய ஒப்பந்தம் செய்து கொள்கின்றார்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள் நம்முடைய எதிரிகள் அல்ல. மாறாக அவர்களும் பிதா வவோடும், குமாரனாகிய இயேசுவோடும் ஐக்கியமாயிருப்பதற்கு, இரட்சகராகிய இயேசு வழியாக உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஐக்கியமானது மையினாலும் எழுத்தினாலும், மனித எண்ணங்களினாலும் உண்டாவதில்லை. மாறாக திராட்சை செடியாகிய இயேசுவோடு ஓட்டப்பட்டிருக்கின்ற கிளைகளே, ஆண்டவராகிய இயேசு வழியாக ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கின்றார்கள். ஆண்டவரா கிய இயேசு இல்லாமல் ஐக்கியம் இல்லை. எனவே நாம் நிர்விசா ரிகளாக மாறிவிடாதபடிக்கு வேதவார்த்தையின் வெளிச்சத்திலே நம்மை ஆராய்ந்து கொள்வோமாக.

ஜெபம்:

தூய ஆவியின் அவிஷேகத்தை எனக்கு தந்த தேவனே, நான் ஆவியை அவித்துப் போடாமலும், உணர்வற்றவனாக உலகத்தோடு சமரசம் செய்கின்றவனாகவும் மாறிவிடாதபடிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:20