புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2024)

ஜீவனின் ஊற்றாகிய இயேசு பரன்

எரேமியா 2:13

ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்;


ஒரு தேசத்திலே உள்ள தண்ணீர் வளங்கள் யாவும் இரசாயன தாக்கத்தினாலே மாசு பட்டதால், அந்த தேசத்தில் குடிகள் வெகுவாய் பாதிக் கப்பட்டார்கள். இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி, நல்ல தண்ணீர் வசதி களை முன்குறித்த நாளிலே ஏற்படுத்துவதாக அந்த நாட்டின் தலைவ ரானவர் வாக்குரைத்திருந்தார். அந்ந நாளுக்கு முன்னதாக, அந்த தேச த்திலுள்ளவர்கள் தங்கள் அறிவுக்கு எட்டியபடி தண்ணீரை சுத்தப்படுத்துவ தற்கு பல வழிகளை தெரிந்து கொண் டார்கள். சிலர் அதை ஆதாயத் தொழிலாக செய்து வந்தார்கள். அந்த முறை மைகளிலே சில பிரயோஜனங்கள் இருந்த போதிலும், அடிப்படை பிரச்ச னையானது தீர்க்கப்படாதிருந்தது. நாட்கள் கடந்து சென்று, தலைவரால் முன்குறிக்கப்பட்ட நாள் வந்த போது, மக்களுக்கு வேண்டிய நல்ல தண்ணீரை இலவசமாக விநியோகித்தார்கள். அதைக் கண்ட சிலர், தாங்கள் இதுவரை செய்து வந்த சுத்திகரிப்பு முறைமையை கைவிட மனதில்லாதிருந்தார்கள். வேறு சிலர், தங்கள் ஆதாயத் தொழில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் நல்ல தண்ணீர் விநியோகத்திற்கு எதிரிடையான காரியங்கள் கூறி வந்தார்கள். இன்னும் சிலரோ, எல்லாம் ஒன்றுதான் என்று விவாதிதுக் கொண்டார்கள். மனித குலமானது பாவத்தில் மாய்ந்து நித்தியமாய் அழிந்து போகாதபடிக்கு, நம்மீது அன்புகூர்ந்த பிதாவாகிய தேவன் தாமே, நமக்கு ஒரு இரட்சகரை அனுப்புவேன் என்று வாக்களித்தார். குறித்த காலம் நிறைவேற முன்னதாக, மனித குலமானது, பாவத்திற்கு பரிகாரம் செய்ய பற்பல வழிகளை தெரிந்து கொண்டார்கள். அவைக ளால் சில பலன் உண்டாயிருந்தபோதும், அந்த வழிகளிளால் பாவத்தின் தோஷத்தை நீக்க முடியவில்லை. முன்குறித்த காலம் வந்தபோது, வாக் களிக்கப்பட்ட இரட்சகராகிய இயேசு வெளிப்பட்டார். விலைமதிக்க முடி யாத இரட்சிப்பை அவர் இலவசமாக மனித குலத்திற்கு கொடுத்தார். ஆனால், மனிதர்களில் அநேகர், தங்கள் முன்னைய முறைமைகளையும்;, பராம்பரியங்களையும் விட்டுவிட மனதில்லாதவர்களாகவும், நித்திய வாழ்வு தரும் இரட்சிப்புக்கு எதிர்த்து நிற்கின்றவர்களாகவும் தங்கள் மனங்களை கடினப்படுத்திக் கொண்டார்கள். ஜீவ தண்ணீராகிய கர்த்தரை அறிய மனதில்லாதவர்ளானார்கள். இரட்சகராகிய இயேசுவின் பாடுகளை அதிகமாக நினைவுகூரும் இந்த நாட்களிலே, மனித குலத்தின் மனக்கடினமானது உடைக்கப்படும்படியாகவும், பிதாவாகிய தேவனு டைய சித்தமானது அவர்களிடத்திலே நிறைவேறும்படிக்கும் கருத்தோட ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

ஓ தாகமாயிருக்கின்றவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள் என்று அழைக்கும் தேவனே, உம்முடைய அழைப்பை உணர முடியாமல் இருக்கும் ஜனங்களின் கண்களை தெளிவு படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 4:14