புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2024)

யாருக்கு பயப்படுகின்றீர்கள்?

மத்தேயு 10:28

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


ஒருவரும் கெட்டுபோகாமல் தேவ ராஜ்யத்திலே நித்திய ஜீவனை கண்டடைய வேண்டும் என்பது பிதாவாகிய தேவனுடைய சித்தமாக இருக்கின்றது. அப்படியானால், ஆதிமுதல் தேவ ராஜ்யத்திற்கு எதிராக கிரியையை நடப்பித்துவரும் இருளின் ராஜ்யத்தின் அதிகாரியாகிய பிசாசானவனின் நோக்கம் என்ன? ஒருவரும் தேவ ராஜ்யத்தில் நித்திய ஜீவனை அடையாமல், இருளின் ராஜ்யத்திலே நித்திய மரணத்தை அடைய வேண்டும் என்பதே அவனு டைய நோக்கமாக இருக்கின்றது. ஒரு பரிசுத்த சந்ததியை உருவாக்கும்படி தேவனாகிய கர்த்தர்தாமே ஆணும் பெண்ணுமாக ஆதாம் ஏவாளை இரு வராக சிருஷ;டித்தார். அந்த சந்த தியை அழிவுக்குட்படுத்தும்படி இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய பிசாசானவ னோ அவர்களை வஞ்சித்தான். எனவே, நற்செய்தியை அறிவிக்கும் படிக்கு தடை செய்யும் தீய ஆவியானது பல வழிகளிலே, பல மட்டங்களிலே கிரியை செய்து வருகின்றது. அவை எல்லாவற்றிற்கும் வஞ் சிக்கும் பிசாசானவனே மூலகாரணம் என்று பரிசுத்த வேதாகமம் கூறு கின்றது. எனவே, நற்செய்தியை அறிவிப்பதற்கு ஒருவன் தடையை ஏற்படுத்தினால், அந்த தடையானது எங்கிருந்து உருவாகியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். சரீரத்தை மட்டும் அழிக்க வல்லவர்க ளுக்கல்ல, தேவனுக்கே நீங்கள் பயந்திருங்கள். இந்த உலகத்தின் எந்த ஒழுங்குகளும், தேவனுடைய சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவே றாதபடிக்கு தடை செய்வதற்கு நீங்கள் இடம் கொடுக்காதிருங்கள். பரிசுத்த வேதாகமானது பாவமும் அநீதியும் என்று கூறும் காரியங்களை துணிகரமாகபட்டப் பகலில் செய்வதற்கு சிலர் தங்களுக்கு ஆதரவான சட்டங்களை ஏற்படுத்துகின்றார்கள். அவர்களும் அறியாமையினாலே அழிந்து போகாமல், பார்வையடையவேண்டும் என்பதற்காக அன்புள்ள தேவன்தாமே தம்முடைய கிருபையை நீடிய பொறுமையினாலே அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அதனால், துன்மார்க்கத்தை நடப்பிக்க ஊக்கு விக்கின்றவர்கள் தங்கள் செய்கைகளை குறித்து மேன்மை பாராட்டு கின்றார்கள். நீங்களோ, கீழ்படிவுள்ள தேவ பிள்ளைகளாக, மனத்தாழ்மை அணிந்து கொண்டு, ஆண்டவராகிய இயேசு வழியாக வெளிப் பட்ட நன்மையை ஜனங்களுக்கு அறிவியுங்கள். தடைகளை ஜெபத்தினாலே மேற்கொள்ளுங்கள். உங்கள் அழைத்த சர்வ வல்ல மையுள்ள தேவன்தாமே என்றென்றும் உங்களோடிருக்கின்றார்.

ஜெபம்:

நித்திய மகிமைக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்துக்களினால் பின்னிட்டு போகாதபடிக்கு, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6