புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2024)

மேலான கட்டளை

மத்தேயு 28:20

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, ஆண்டவராகிய இயேசுவின் கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் பல பாடுகளை சகித்தார்கள். எவ்விதமான அநியாயங்களையும் அறியாத அவர்க ளில் சிலர் அந்நாட்களிலிருந்து நாட்டுச் சட்டத்தின்படி சிறையிலிடப்பட்டிருந்தார்கள். அப்படியாக அவர்களிடம் எந்த துன்மார்க்கத்தனங்களோ, களவுகளோ, பொய்களோ, அநியாய ங்களோ எதையுமே அறிந்திராத அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? நித் திய மரணத்திலிருந்து மனிதகுலம் விடு தலையடையும் ஒரே வழியை ஜனங்களுக்கு அறிவிப்பது, அந்நாட்களிலிருந்த மதச்சட்டங்களுக்கு விரோதமாக இருந்தது. அப்படியானால் அவர்கள் நற்செய்தியை அறிப்பது தவறான காரி யமா? இல்லை, நற்செய்தியை அறி விக்காமல் இருப்பதே தேவனுடைய பார்வையிலே தவறான காரியமாக காணப்படும். அவர்கள் நன்மை செய்து பாடநுபவிக்கும் போது மாம் சத்திலே போர் செய்யாமல், தங்கள் எஜமானனாகிய கிறிஸ்துவைப் போல, தங்களுக்கு ஏற்பட்ட பாடுகளை சகித்து, ஆவியினாலே வாழ்வின் போராட்டங்களிலே ஜெயங் கொண்டார்கள். நாம் உலகத்திலே வாழ்ந்தாலும் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்லர். எனினும் நாம் இந்த உலகத்திலுள்ளவர்களை வெறுத்துவிடும்படி அழைக்கப்படவில்லை. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16) நாம் மேலான அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்கின் றவர்களோ, கலகங்களை ஏற்படுத்துகின்றவர்களோ அல்லர். அதனால் உன்னதத்திலிருந்து கொடுக்கப்பட்ட அதிமேன்மையான கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. அதுவே நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியமாக இருக்கின்றது. அந்தப் ஊழியத்தின் பாதையிலே பாடுக ளும், அவமானங்களும் நிந்தைகளும் ஏற்படலாம். அவ்வேளைகளிலே நாம் மாம்சத்திலே எதிர்த்து போர் செய்யாமல், கிறிஸ்துவின் சிந்தை யைத் தரித்தவர்களாக, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி, ஆவியி னாலே போராட்டங்களை ஜெயங் கொள்ளுகின்றவர்களாக கடந்து செல்வோமாக. அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்த நம் எஜமானனாகிய ஆண்டவர் இயேசுவையே நினைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இப்பேன் என்ற தேவனே, இளைப்புள்ளவர்களாய் எங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோ காதபடிக்கு, கிருபையினால் பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:28