புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2024)

கண்கள் நேராய் நோக்கக்கடவது

யோவான் 16:8

அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.


எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல தகப்பனானவர், தன் குமாரர்களுக்கு தெளிவாக ஆலோசனைகளையும், எச்சரிப்புக்களையும் கொடுத்திருந்தார். ஒரு நாள் அவருடைய குமாரர்களின் இளையவன், தெரு வழியாக செல்லும் போது, தன் தகப்பன் செல்லக் கூடாது என்ற கூறிய வீட்டிற்கு முன்பாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட தகப்பனானவர், அவனை கண்டித்து தண்டித்தார். அப்படியிருந்தும், அவன் கண்கள் அந்த வீட்டில் நாட்டமாயிருப்பதை கண்டு அவன் குடும்பத்தார் துக்கமடை ந்தார்கள். சில ஆண்டுகள் கடந்து அவன் தன் வயதிற்கு வந்த போது, தகப்பன் போகாதே என்று கூறிய வீட்டிலுள்ள ஒரு இளைஞனோடு நட்புள்ளவனாகி, ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு சென்றான். அங்கே அவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரத்தை கண்டு ஆச்சரியப்பட்டான். அவர்கள் வீட்டின் ஒன்றுகூடலில் களிப்பும், ஆடல்பாடல்களும், நல்ல வரவேற்பும் இருந்தது. நன்றாக கற்றிருக்கி ன்றார்கள். நல்ல வேலை களிலே அமர்ந்து கைநிறைய உழைக்கின் றார்கள். அங்கே கண்டிப்பும் இல்லை, காவலும் இல்லை. யாவரும் எவ்வளவு சந்தோஷமாக இருக் கின்றார்கள். இப்படியல்லவோ வீடும் குடும்பமும் இருக்க வேண்டும் என்று அவர்களோடு ஐக்கியமுள்ளவனாக மாறிவிட்டான். ஏன் இந்த ஐக்கியம்? அவனவன் தன்தன் இருதயத்திற்கு ஏற்றவைகளை செய்வ தற்கு அந்த வீட்டிலே எந்த தடையும் இருந்ததி ல்லை. தவறான வழி களை அவர்களின் பெற்றோர், ஊக்குவிக்காத போதும், தவறான வழி களின் வாழும் தங்கள் பிள்ளைகளை அவர்கள் கண்டித்து உணர்த்து வதில்லை. அதனால் சட்டமில்லாத அந்த வீட்டிலே குற்றமேதுமில் லாதிருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, சத்திய ஆவியானவர் வரும் போது சகல சத்தியத்திலும் அவர் நம்மை நடத்திச் செல்வார். இன்று சில இடங்களிலே பரிசுத்தமாகுதலைக் குறித்து போதிப்பதி ல்லை. தவறான வழிகளை கண்டித்து உணர்த்துவதில்லை. ஆதலால் நிஜம் போல காட்சியளிக்கும் போலியான அவ்விடங்களுக்கு செல்ல வதை சிலர் விரும்புகின்றார்கள். வஞ்சிக்கப்பட்டு போய்விடாதிருங்கள். கர்த்தர் கிருபையுள்ளவர். அவருடைய பரிசுத்தத்தில் மாறுதல் ஏதுமி ல்லை. கிருபையின் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, மனித இதயத்திற்கு செம்மையாக தோன்றும் வழிகளை நான் நோக்காதடிக்கு, நீர் காட்டிய வழியை என் கண்ணிமைகள் செவ்வையாய் பார்க்கும்படிக்கு, பிரசாசமுள்ள மனக்கண்ளை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:24-27