புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2024)

எதற்கு இடங் கொடுக்கின்றீர்கள்?

2 கொரிந்தியர் 11:3

உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.


சில விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே, இந்த உலகத்திலுள்ள போலியானவைகள் அவர்களுக்கு நிஜமாய் தோன்றுவதற்கு, அவர்களுடைய கீழ்படியாமையே காரணமாக இருக்கின்றது. முதலாவதாக, அவர்கள் போலியானவைகளை பார்ப்பதற்கோ அல்லது போலியான பேச்சை பேசுகின்றவர்களின் பேச்சை கேட்பதற்கோ அல்ல போலியானவர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்வதற்கோ தங்களை விட்டுக் கொடுக்கின்றார்கள். போலியானவைகள் தங்கள் வாழ்க் கையில் உட்பிரவேசிக்க இடங்கொடு க்கின்றார்கள். அது எப்படியெனில், ஆதியிலே தேவனாகிய கர்த்தர் தாமே, ஆதாம் ஏவாள் வாழ்ந்து வந்த ஏதே னின் தோட்டத்தின் மத்தியிலே உலவு கின்றவராக இருந்தார். அவர் அவர்களோடு பேசினார். தேவனாகிய கர்த்தருடைய பேச்சானது, மனிதர்களுடைய பேச்சை போலவோ, அல்லது பிசாசானவனுடைய பேச்சைப் போலவோ தந்திரமுள்ளதல்ல. அவர் தாமே, நித்திய மரணத்திற்கு இட்டுச் செல்லும் மரத்தின் கனியை புசிக்க வேண் டாம் என்று திட்டமானதும், தெளிவானதுமான கட்டளையை ஆதாம் ஏவாளுக்கு கூறியிருந்தார். 'ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத் தினாலே ஏவாளை வஞ்சித்தது' சர்ப்பமானது ஏவாளை வஞ்சிக்க அவள் அதன் பேச்சை கேட்டாள். தேவனாகிய கர்த்தர் விலக்கிய கனியை பார்த்தாள். இவ்வண்ணமாக அவள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியாமல் போக தன்னை விட்டுக் கொடுத்தாள். அவள் பிசாசானவனுக்கு சந்தர்பத்தை கொடுத்தாள். அவன் அவளை தன் வஞ்சக வலைக்குள் சிக்க வைத்தான். இவ்வண்ணமாக சத்தியத்தை நன்றாக அறிந்த சில விசுவாசிகள், சில வேளைகளிலே சத்தியத்தைவிட்டு வழுவிப்போகும் உலகத்திற்கேற்ற போதனைகளை கேட்கின்றார்கள். அது கேட்பதற்கு இதமாக இருக்கின்றது என்றும், நவீன உலகத்திற்கு அது ஏற்புடைய தாக இருக்கின்றது என்றும், அவைகள் தங்கள் வாழ்வில் உட்பிர வேசிக்க இடங் கொடுகின்றார்கள். கசப்பான வேர் முளைந்தெழும்ப இடங் கொடுக்கின்றார்கள். கொஞ்சம் புளித்தமாவிற்கு இடங் கொடு கின்றார்கள். இதனால் தங்கள் விசுவாசக் கப்பலை சேதப்படுதிக் கொள்கிள்றார்கள். பிரியமானவர்களே, கற்றறிந்த மாறாத சத்தியத்திலே உறுதியாக நிலைத்திருங்கள். மாறுபாடான சிந்தனைகளை உங்களைவி ட்டு முற்றிலுமாய் அகற்றி விடுங்கள்.

ஜெபம்:

ஜீவ மார்க்கத்தை எனக்கு போதித்த தேவனே, உமது கட்டளை களை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்படுவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:34