புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2024)

நிஜமானதை பற்றிக் கொண்டிருங்கள்

மத்தேயு 7:16

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்;


ஒரு பட்டணத்திலே, போலியான பணச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநி யோகத்திலிருப்பதை அறிந்து கொண்ட அரச அதிகாரிகள் 'போலிய னவைகளை நம்பி ஏமாறாதிருங்கள்;' என்ற தலைப்பிலே நாட்டு ஜன ங்களுக்கு எச்சரிப்பை வழங்கினார்கள். போலியானவைகள் நிஜமான பணத் தாள்களைப் போல காட்சியளித்தாலும், நிஜமானது தனித்து வமாக சிறப்பியல்புகளை கொண்டதாக காணப்படும். எனவே போலி யானவைகளை வேறு பிரித்த றிவதற்கு, நாம் நிஜமானது இன்னதென்று நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சில கப டமுள்ள வேலையாட்கள், கிறி ஸ்துவினுடையவர்கள் என்ற வேஷத்தை தரித்துக் கொள்கின்றவர்க ளாயிருக்கின்றார்கள். அதைக் கண்டு ஆச்சரியப்படாதிருங்கள். சாத்தா னும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே என்று பரிசுத்த வேதாகமத்திலே நாம் காண்கின்றோம். 'கள்ளத்தீர்க்கதரிசிக ளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சி க்கிற ஓநாய்கள்.' இவர்கள் வேத வசனத்தை போதித்தாலும், இவர்கள் காண்பிக்கும் வழி, உலக போக்கிற்கு ஏற்புடையதாயிருக்கும். வாசல் விரிவாயும், வழி விசாலமுமாயிருக்கும். காலத்திற்கு ஏற்றபடி இவர்கள் போதனைகளும் மாறுபாடுடையதாக இருக்கும். சில மரங்கள் சீக்கரமாக வளர்ந்து, பார்வைக்கு ஆரோக்கியமும் செழிப்புமுள்ளதாக காணப்பட லாம். ஆனால், அந்த மரமானது அது கொடுக்கும் கனிகளினாலே அறி யப்படும். அதுபோல, போலியானவைகளை நிஜம் போல பேசி, தேவ பிள்ளைகளை வஞ்சிக்க முயற்சிக்கின்றவர்களை, அவர்களுடைய பேச் சினாலே அல்ல, அவர்களுடைய செல்வ செழிப்பினாலே அல்ல, அவர் களுக்கு பின்பாக செல்லும் ஜனத்தொகையினாலே அல்ல, அவர்கள் காண்பிக்கும் அற்புத அடையாளங்களினாலே அல்ல, மாறாக அவர் கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் காண்பிக்கும் கனிகளினாலே அறி யப்படுவார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு மனத்தாழ் மையும், கீழ்படிவும், சாந்தமுமுள்ளவராக பிதாவாகிய தேவனை பிரியப்படுத்து கின்றாகவும் இந்த உலகத்தினால் பகைக்கப்படுகின்றவருமாக இருக் கின்றார். திராட்சை செடியாகிய அவரரோடு ஒட்டப்பட்டவர்களும், அவ ரைப் போலவே இருப்பார்கள். அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

ஜெபம்:

நித்திய வாழ்வு செல்லும் வழியை காண்பித்த தேவனே, நித்திய ஜீவனுக்கு செல்லாத எந்த வழிகளையும், போதனைகளையும் நான் நம்பி ஏமாறாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:13-14