தியானம் (பங்குனி 12, 2024)
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்
1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;
ஒரு கிராமமொன்றிலே வசித்து வந்த முதலாளியொருவன் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை கொண்ட பண்ணையொன்றை நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் ஆடுகளை பட்டிக்குள் திருப்புகின்ற நேரத்திலே, அப் பகுதியிலே, புதிதாக பிறந்த ஓநாயின் குட்டியொன்று அநாதரவாகயி ருப்பதை கண்டு, இரக்கங்காட்டி அதை எடுத்து, சில நாட்களாக பண் ணையை காக்கும் நாய்களின் குட்டிகளோடு பராமரித்து வந்தான். அந்த குட்டி ஓநாயும், வேற்றுமை யேதுமின்றி, பண்ணையை காக்கும் நாய்களின் குட்டிகளைப் போலவே பார்வைக்கு மிகவும் அழகாகவே காட்சி யளித்தது. அதை கவனித்து வந்த அந்த பண்ணையின் முதலாளியானவன், அந்த ஓநாய், பண்ணையி லுள்ள நாயைப் போலவே வேலையாட்களோடு பழகி வருவதால், அதை அப்படியே விட்டுவிட்டான். சில மாதங்களுக்கு பின், ஒரு நாள் இரவு நேரத்திலே, அந்த பண்ணைக்குள் வந்த வேறு ஓநாய்கள், சில ஆடுகளை கடித்து காயப்படுத்தியே போது, பண்ணையிலிருந்து ஓநா யும், ஆட்டின் இரத்தத்தை ருசிபார்த்தது. அதன் பின்னர், அந்த ஓநா யும் மற்ற ஓநாய்களைப் போல சில ஆடுகளைப் பீறி சிதறடித்து விட் டது. பிரியமான சகோதர சகோதரிகளே, திருடன் திருடவும் கொல்ல வும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். திருடனானவன், நான் திருடன் என்ற பெயர் பலகையோடு, முன்குறித்து நேரத்தில் வந்து திருடுவேன் என்ற சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவன் திருட்டு தனமாக காரியங்களை செய்வதால், வீடு எங்கே திருந்திருக்கின்றது என் றும், எப்படி அந்த வீட்டாரை வஞ்சிக்க முடியும் என்றும் தருணம் தேடி க்கொண்டிருப்பான். அதவாது, நம்முடைய சிந்தையிலே தேவனுக்கு ஏற்புடையதல்லாத சுபாவங்களை அறிந்து, நம்முடைய இருதயத் தில் கசப்பு, பிரிவினை, வைராக்கியம் போன்றவற்றை உண்டுபண்ணு தற்கு நீடியபொறுமையோடு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பான். எனவே, உங் கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள். அந்த எல்லாக் காவல் என்னவென்பதை வேத வார்த்தைகள் நமக்கு தெளிவாக போதிக்கின்றது. உங்கள் இதயக் கதவானது யாருக்கு திறந்து வைக்கப் பட்டிருக்கின்றது என்பதை நீங்களே ஆராய்நது அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய சத்திய வார்த்தைக்கு அப்பாற்பட்ட எந்த உறவும் உங்களு க்கு வேண்டாம். தெளிந்த புத்தியோடு விழித்திருந்து ஜெபம் செய்யுங் கள். ஆவியானவர் உங்களை வழிநடத்திச் செய்வார்.
ஜெபம்:
சகல சத்தியத்திலும் என்னை நடத்திச் செல்லும் தேவனே, உம் முடைய வார்த்தையை மீறி, என் மனத்திற்கு நன்மையான தோன்றுகி ன்ற எந்த ஒரு கிரியையும் நான் நடப்பிக்காதபடிக்கு என்னை காத்து நட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 4:5