புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2024)

காரியத்தின் கருப்பொருள்

2 தீமோத்தேயு 2:23

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.


ஒரு கிராமத்திற்கு அப்புறமாக இருந்த அழகான கடற்கரையொன்றிலே, அவ்வப்போது முதலைகளினால் அபாயம் ஏற்படுவதினால், அந்த கிராமத் தின் மக்களுக்கு எச்சரிப்பை வழங்கும்படிக்கு, ஒரு கண்காணியானவ னை வேலைக்கமர்த்தினார்கள். அந்தக் கண்கணியானவனும், சலிப்பில் லாமல், அந்த கடற்கரைக்கு செல்லும் மக்களை தடுத்து நிறுத்தி, அவர் களுக்கு எச்சரிப்பை கொடுத்து, அந்த இடத்திலே அவர்கள் நீந்தாத படிக்கு தடை செய்து வந்தான். ஒரு நாள் சில வாலிபர்கள் எப்படியோ அந்தக் கடற்கரைக்கு சென்று, அதனருகே பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தா ர்கள். அந்த வாலிபர்கள் இத ற்கு முன்பாகவும் அந்தக் கடற்கரைக்கு சென்று எச்சரிப்பை பெற்றிருந்தார்கள். அதனால் அவர்களை மறுபடியும் கண்ட கண்காணியா னவன் முன்னொரு நாட்களிலும் இல்லாததுபோல கோபமடைந்ததால், அந்த வாலிபர்களை நோக்கி: எந்தக் கணப்பொழுதிலும் உங்கள் உயிரு க்கு ஆபத்து ஏற்டலாம் எனவே இந்த இடத்தைவிட்டு உடனடியாக போய் விடுங்கள் என்று கடுமையான தொனியிலே எச்சரிப்பை வழங்கினான். அதைக் கேட்ட சில வாலிபர்கள், 'நீ மரியாதையாக எங்களுடன் தயவான தொனியிலே பேசினால் நாங்கள் இங்கிருந்து செல்வோம், இல்லையென்றால், நாங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்போம்' என்று மறுமொழி கூறினார்கள். பிரியமானவர்களே, அந்தக் கண்காணியானவன், சொன்னது உண்மை. ஆனால், அந்த வாலிபர்களோ, தங்கள் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை அறிந்திருந்தும், கண்காணியானவன் சொன்ன எச்சரிப்பின் தொனியைக் குறித்து அலட்டிக் கொண்டார்கள். முறைப்படி சொன்னால் கேட்போம் அல்லது நாங்கள் மரித்தாலும் நாங்கள் எங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்ற அகங்கா ரமுள்ளவர்களாக காணப்பட்டார்கள். இவ்வண்ணமாகவே, இன்று சில விசுவாசிகளின் மனநிலையும் காணப்படுகின்றது. வாலிபர்கள் மட்டு மல்ல, பெரியவர்களும், அனுபவமிக்கவர்கள் கூட 'இந்த செய்தியை இப் படி கூறியிருந்தால் நலமாயிருந்திருக்கும். அவர் கூறிய ஆலோசனையின் தொனி ஏற்புடையதல்ல' என்று செய்தியின் கருபொருளை உணராமல், மனந்திரும்ப வேண்டிய கிருபையின் காலத்திலே, தங்கள் நேரத்தை வீண் வாக்குவாதங்களிலே விரயப்படுத்திக் கொள்கின்றார்கள். நீங்களோ அப்படியாயிராமல் இலக்கின்மேல் கண்களை வைத்து ஓடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் எப் போதும் ஜீவ வார்த்தைகளின் கருப்பொருளை உணரந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க பிரகாசமுள்ள கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தீத்து 3:9

Category Tags: