புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2024)

சத்திய வார்த்தைகள்

யோவான் 8:32

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுத லையாக்கும் என்றார்.


ஒரு தேசத்தை அரசாண்டுவந்த ராஜாவானவர், தேசத்திலுள்ள குறிப்பிட்ட ஊரொன்றில் வசித்து வந்த மக்களுக்கு அவரசமாக செய்தியொன்றை தன் ஸ்தானாதிபதியினூடாக அனுப்பி வைத்தார். போகும் வழியிலே அந்த செய்தியை படித்த ஸ்தானாதிபதி, இந்த செய்தியில், ராஜாவா னவர், அந்த ஊர் மக்களின் குறைகளை மிகவும் கடுமையாக கண்டி த்து உரைத்திருக்கின்றார். இதை நான் அந்த ஊர் மக்களுக்கு கூறி னால், அவர்கள் என்னையும் பகை த்து விடுவார்கள். எனக்கிருக்கும் கனத்தையும் நான் இழந்து விடு வேன். எனவே, இந்த செய்தியை நான் சற்று திருத்தம் செய்து, அந்த ஊராரின் மனதிற்கு ஏற்றபடி மாற் றம் செய்வேன் என்று கூறி, ராஜா வானவர் கொடுத்த செய்தியை மாற்றிப் போட்டான். தவறான காரி யங்களை செய்து வரும் அந்த ஊர் மக்களோ, ஸ்தானாதிபதியினால் மாற்றப்பட்ட செய்தியை கேட்டபோது, ராஜாவானவர், தங்கள் வழிக ளில் பிரியமாக இருக்கின்றார் என்று எண்ணி மகிழ்;ச்சியடைந்தார்கள். தேசத்தின் ராஜாவின் ஸ்தானாதிபதி என்று பெயரை சூடிக் கொண்ட வன், தன் பெயருக்கேற்றபடி, தன் ராஜாவிற்கு உண்மையுள்ளவனாக இருக்கவில்லை. ராஜாவானர், அந்த ஸ்தானாதிபதியின் உண்மையற்ற வாழ்க்கையை அறியும் நாளிலே, அந்த ஸ்தானாதிபதியின் நிலைமை பரிதாபமுள்ளதாக இருக்கும். அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாக வாழு ம்படிக்கு அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய் யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்து க்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக் குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.' (2 தீமோத்தேயு 3:16-17). பரிசுத்த ஆவியானவர் வரும்போது சகல சத்தியத்தைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக் கின்றார். ஆனால், இன்று சிலர், நாங்கள் இப்படியாக பாவம், மனந்திரு ம்புதல், பரிசுத்தமாகுதல், நியாயத்தீர்ப்பை பற்றி உபதேசம் செய்தால், மக்களின் நன்மதிப்பை இழந்து விடுவோம், அதனால் மக்கள் எங்க ளைவிட்டு போய் விடுவார்கள் என்று, சத்தியத்தை சுத்தமாக பேசாமல், தங்கள் நயவ சனிப்பினால், மக்களின் மனதை குளிரப்பண் ணும்படி பேசுகின்றார்கள். இப்படிப்பட்ட போதனைகளால் நீங்கள் இழுப்புண்டு போகாதடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

அன்பில் என்னை பரிசுத்தமுள்ளவனாகும்படி வேறு பிரித்த தேவனே, பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு காத்துக் கொள்ளும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 4:7