புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2024)

கிருபையின் ஆண்டுகள்!

ரோமர் 6:1

ஆகையால் என்ன சொல் லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?


கர்த்தாவே! கர்த்தாவே! என்று அவரை நம்பி வாழ்ந்து வந்த அந்த மனிதனைப் பார், அவன் இளவயதிலேயே மரித்துப் போனான். என்னைப் பார், என் வழியைப் பார், எழுபது ஆண்டுகளை கடந்து விட்டேன், இன்னும் ஆரோக்கியத்தோடு வாழ்கின்றேன் என்று ஒரு மனிதனானவன் தன் சுயநீதி நிறைந்த வாழ்க்கையை குறித்து ஒரு மேய்ப்பரானவர் முன்னிலையிலே பெருமைபாராட்டி பேசிக் கொண்டான். அதை கேட்டுக் கொண்டிருந்த மேய்ப்பரானவர் அந்த மனிதனை நோக்கி: ஐயா, நீங்கள் உங் கள் வாழ்க்கையைக் குறித்து மேன்மைபாராட்டுகின்றீர்கள். கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டு வாழ்ந்த அந்த விசுவாசியானவன், இந்த உலகிலே உயிரோடிருந்தாலும், இந்த உலகைவிட்டு கடந்து சென்றாலும், அவன் மரித்துப் போவதில்லை, அவன் தன் தாபரமாகிய கர்த்தரோடு நீடூழியாய் என்றென்றும் வாழ்ந்திருப்பான். கர்த்தரை அறிந்தும் அறியாமல் வாழும் உங்களுக்கு ஆண்டவர் கிருபையின் ஆண்டுகளை இன்னும் கூட்டிக் கொடுத்திருக்கின்றார். ஏனெனில், ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண் டும் என்பதற்காக அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். எனவே, உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபையின் ஆண்டுகளை மேன்மைபாராட்டுதலிலே, அழித்துக் கொள்ளாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு கர்த்தரிடத்திலே உங்களை ஒப்புக் கொடுங்கள் என்று அவருக்கு அறிவுரை கூறினார். ஆம், பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் எதைக் குறித்து மேன்மை பாராட்ட முடியும்? கர்த்தருடைய சிலுவையைக் குறித்தும், அவர் நம்மேல் பொழியும் கிருபையைக் குறி த்துமேயன்றி வேறறொன்றையும் குறித்து மேன்மைபாராட்ட முடியாது. கர்த்தர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் நாம் பாவத்திலும் அக்கிரமத்திலும் வாழ்ந்துவிட்டால் சரியாகிவிடுமோ? இல்லை! திறவுண்ட வாசல் அடைபட முன்பதாக, கிருபையின் நாட்களிலே மனத்தாழ்மையோடு அதனூடாக பிரவேசியுங்கள். 'நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.'

ஜெபம்:

என்னுடைய பாவங்களுக்குத்தக்கதாக செய்யாமல் கிருபையை பொழிகின்ற தேவனே, கிருபையின் ஆண்டுகளை ஞானமாய் பயன்படுத்தும்படிக்கு உணர்வள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:15-17