புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2024)

நாம் சுயாதீனமுள்ளவர்கள்

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


ஒரு ஊரிலே வசித்து வந்த விசுவாசியானவன், தன் உடன் சகோதர னொருவனுக்கு எதிராக அநீதியான காரியமொன்றை செய்துவிட்டான். அவன் சென்று வந்த சபையின் மூப்பர்கள் அந்தக் காரியத்தை விசார ணை செய்த போது. அநீதியான காரியத்தை செய்த விசுவாசியானவன், தான் செய்தது அநீதி என்பதை அறிந்திருந்தும், மூப்பர்களை நோக்கி: 'சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலை வரப்படும்.' எனவே, நான் அநீதி செய்தேன் என்பதற்காக சாட்சிகளை கொண்டு வாருங்கள் என்று அமைதலான தொனியிலேயே கேட்டுக் கொண்டான். அவன் செய்த அநீதி யான செயலை நிரூபிப்பதற்கு சாட்சி கள் இல்லாதிருந்ததால், மூப்பர்கள் மேற்கொண்டு அந்த காரியத்தை விசா ரணை செய்ய முடியாமல், அவனு க்கு ஆலோசனை கூறி அனுப்பிவிட் டார்கள். அந்த அநீதி செய்த விசுவா சியானவன், தான் ஞானமுள்ள மனி தன் என்று எண்ணிக் கொண்டான். ஆனால், நித்திய ஜீவனுக்கென்று அருளப்பட்ட தேவ வார்த்தைகளை தன் துர்குணத்திற்கு மூடலாக பயன்படுத்துவதால், தனக்கு வரவிருக் கும் பின்விளைவுகளை உணர்ந்து கொள்ள முடியாமல் அவன் மனம் கடினப்பட்டுப் போயிற்று. தனக்கு கேடுண்டாக்கும்படிக்கே, தேவனு டைய ஜீவ வார்த்தைகளை தனக்கு இலாபமுண்டாகும்படி அவன் புரட் டுகின்றவனாக காணப்பட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, மீட் பராகிய இயேசு இந்த உலகிலே தம்முடைய திருப்பணியை வெளிய ரங்கமாக ஆரம்பிக்கின்ற நாட்களிலே, சோதனைக் காரணாகிய பிசாசா னவன், வேத வார்த்தைகளை சுட்டிக் காண்பித்து, தேவ குமாரனாகிய இயேசுவை சோதித்தான். தேவனடைய நீதியானது, மீட்பராகிய இயேசு வழியாக நிறைவேறாமல் தடுக்கும்படிக்கு, அவன் வேத வார்த்தை களை அநீதிக்காக தவறாக பயன்படுத்தினான். அதைப் போலவே, அவனை சேர்ந்த மனிதர்களும், பின்மாற்றமடைந்த விசுவாசிகளும், தங்கள் சொந்த வழிகளை நியாயப்படுத்த, இரட்சிப்புக்கேதுவான வேத வார்த்தைகளை தவறான முறையிலே பயன்படுத்துகின்றார்கள். பிரியமானவர்களே, உயர்விலும், தாழ்விலும், நிறைவிலும், குறைவிலும், வேதனையிலும், சோதனையிலும் உங்கள் வாழ்வில் தேவ நீதி நிறைவேறும்படிக்கு தேவ சமுகத்திலே உங்களை தாழ்த்தி ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, உம்முடைய வார்த்தைகளை என் சுயநீதிக்காக பயன்படுத்தும்படி துணிகரம் கொள்ளும் இருதயத்தை என்னை விட்டு அகற்றி, உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:8-9