புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2024)

ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்

எபேசியர் 6:10

கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


குறிப்பிட்ட தேசமொன்றிலே மலைப்பாம்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததால், குறித்த இடத்தில் வாழும் மக்களிற்கும், பலதரப்பட்ட விலங்கினங்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டிருந்தது. அந்த பாம்புகள் அந்த இடத்திலுள்ள மனிதர்களை விழுங்கிப்போடுவதற்கு முன்னதாக, அந்தப் பாம்புகளை அழித்துப் போட வேண்டும் என்ற சட்டம் அங்கே பிற ப்பிக்கப்பட்டது. சுருக்கமாக சொல்லப் போனால், அந்த பாம்புகள் கொன்றுபோடப்படாவிட்டால், அவை மனிதர்களை கொன்று போடும் என்பதே. இவ்வண்ணமாகவே விசுவாசிகளின் வாழ்க்கையிலே உண்டாகும் மாச எண் ணங்களை முற்றாக அழித்துப் போடா விட்டால், அவை நாளாடைவிலே விசு வாசிகளை கொன்று போடும். அதா வது, விசுவாசிகள் என்று பெயரை தரித்துக் கொண்டு அனலுமின்றி குளிருமின்றி வாழும் வாழ்க்கைக்கு அவர்களை தள்ளிப்போடும். நம் முடைய ஆண்டவராகிய இயேசுதாமே, முற்காலத்திலே நம்மை கட்டி ப்போட்டிருந்த அடிமைத்தனத்தின் சங்கிலிகளை அறுத்து, நம்மை அந்த கட்டு களிலிருந்து விடுவித்தார். இருளினால் நிறைந்திருந்த இருதயத்திலே தம்முடைய திவ்விய ஒளியை பிரகாசிப்பித்தார். அந்த ஒளியானது நம்மில் தொடர்ந்து பிரகாசிக்கும்படிக்கு, அவருடைய ஜீவ வார் த்தைகளின் தியானம் நம் சிந்தையிலே இரவும் பகலும் இருக்க வேண் டும். 'நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ள வர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள் ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தன ங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகா திபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனை களோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்க ளாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வா யுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.' இந்த சர்வாயுதவர்க்க மானது தேவனுடைய வார்த்தைக்குள் அடங்கியிருக்கின்றது. அவரு டைய வார்த்தையின் வழியில் நடப்பவர்கள் எல்லா காவலோடும் தங் கள் இருதயத்தை காத்துக் கொள்கின்றார்கள். அனுதின ஜெபத்தின் வழியாக அவர்கள் கர்த்தரோடுள்ள உறவிலே வளர்ந்து பெருகுகி ன்றார்கள். பிரியமானவர்களே, மாம்சத்தின் எண்ணங்கள் உங்கள் இரு யதத்தை ஆண்டு கொள்வதங்கு முன்னதாக, தேவன் தரும் பெலத்தி னாலே அவ ற்றை முற்றாக அழித்துக் போடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, நீர் எனக்கு ஈவாய் கொடுத்திருக்கும் அருமையான ஆலோசனைகளையும் எச்சரிப்புக்களையும் நான் அசட்டைபண்ணாதிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:19-21