புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2024)

இந்நாட்களின் தியானம்

கொலோசெயர் 3:9

பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,


இன்றைய நவீன உலகிலே பண்டிகைகள் பெருநாட்கள் வரும் முன்னதாகவே, எத்தகைய பரிசுப் பொருட்களை பரிமாறலாம் என்ற எண்ணக் கருத்துக்களை (Gift Ideas) கொண்ட பட்டியலை அத்துறையிலே தேர் ச்சி பெற்றவர்கள் தயாரித்து வழங்குகின்றார்கள். திருமணநாளை சிறப்பாக செய்து முடிப்பதற்காக திருமண நாளை திட்டமிட்டு செயற்படுத்துகின்றவர்களை நியமித்துக் கொள்கின்றார் கள். கர்த்தருடைய பாடுகள், மரணம், உயிர்தெழுதலை குறித்து அதிகமாக தியானிக்கும்படி நியமிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களிலே, எவற்றைக் குறித்து நாம் தியானம் செய்ய முடி யும் என்ற எண்ணக் கருத்துகளை பரிசுத்த வேதாகமத்திலே குறிப்பாக நிரூபங்களிலே நாம் காணலாம். இன்றைய நாளிலே கொலோசேயர் நிரூபத்தில் மூன்றாம் அதிகாரத்திலே குறிப்பிடப்பட்ட அருமையான ஆலோசனைகளில் சிலவற்றைக் நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். முதலாவதாக, மேலானவைகளை நாம் தேடும்படிக்கு இந்த உலகத்திற்குரிய மாம்சத்தின் இச்சைகளை உண்டுபண்ணுகின்ற நம்முடைய அவயவங்களை நாம் அழித்துப் போடவேண்டும். அதாவாது நம்முடைய சரீரம் விரும்பும் எல்லாவற்றிற்கும் நாம் இடம் கொடுக்கா மலும், மாம்சத்தின் எண்ணங்களை மறுபடியும் உயிரடையச் செய்யா மல், முற்றாக அழித்துப்போட வேண்டும். அவைகள் நம்முடைய சிந்தனை யில் தோன்றும் போது, அவை நம்முடைய சிந்தனையிலே நிலைநிற்க நாம் இடம் கொடுக்கக் கூடாது. இன்று பலர் தங்கள் இருயத்தில் உண்டா யிருக்கும் பொருளாசையை தேவனுடைய ஆசீர்வாதம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். விக்கிரக ஆராதனையாகிய பொருளாசையானது விசுவாசிகளை விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகப் பண்ணிவிடுகின் றது. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதா யம் என்ற அறிவின் பெருக்கமானதே தேவனுடைய ஆசீர்வாதமாக இருக்கி ன்றது. இந்த உலகத்திற்குரியவைகள் நம் இருதயங்களை நிறைத்துவிடாதபடிக்கு, நாம் அவற்றிற்கு ஒரு எல்லையை உண்டு பண்ண வேண் டும். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்ற நிச்சயத்தை உணர்ந்தவ ர்களாய், நம்மிடம் உள்ள பொருட்கள் அழிந்து போவதற்கு முன்பதா கவே, தேவநீதியின் கிரியைகளை நடப்பிப்பதற்கு நாம் அவற்றை பய ன்படுத்த முடியும். பழைய மனுஷனுக்குரிய சிந்தனையின் முறைமையை களைந்துவிட்டு புதிய மனுஷனுக்குரிய சிந்தனையையுடையவராயிருங்கள்.

ஜெபம்:

மேலானவைகளை தேடும்படி என்னை அழைத்த தேவனே, என் மாம்சத்தின் எண்ணங்கள் என்னில் நிலைத்திருக்க இடங்கொடாமல், அவற்றை முற்றாக அகற்றிவிட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:6-8