புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2024)

மேலான நோக்கம் என்ன?

2 கொரிந்தியர் 4:16

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.


ஒரு விசுவாசியானவன், ஆண்டுதோறும் தன் தகப்பனானவர் இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்ற நினைவு கூறுதலின் நாட்கள் வரும் போது, தன் தகப்பனானவர், பல இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தி யிலே பல சாவல்களை எதிர் நோக்கிய போதும், அந்தக் கஷ; டங்கள் ஒன்றையும் பொருட்படு த்தாது, குடும்பத்தின் எதிர்காலத் திற்காக செய்த தியாகங்களை நினைத்து நன்றியுள்ள இருதயத் தோடு ஆண்டுகள் தோறும் முன் குறித்த நாளிலே, பல தானதர்ம ங்களையம் நற்கிரியைகளையும் செய்து வந்தான். அதைவிட மேலாக, எதற்காக தன் தகப்பனானவர் கடுமையாக உழைத்தாரோ, அந்த நோக் கம் தன்னில் நிறைவேறும்படிக்கு செம்மையான வழியிலே நடந்து உத்த மனாக அவன் வாழ்ந்து வந்தான். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற அருமையன சகோதர சகோதரிகளே, விசேஷமாக இந்நாட்க ளிலே, உலகம் முழுவதும் பரந்திருக்கும் பல விசுவாசிகள், அநேக தானதர்மங்களையும், நற்கிரியைகளையும், ஒறுத்தல்களையும் செய்து வருகின்றார்கள். குறித்த நாட்கள் முடிவடைந்ததும் பலர் தங்கள் வழ மையான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அந்த வழமையான வாழ் க்கை என்ன என்பதை இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையை மையமாக வைத்து சிந்தித்துப் பாருங்கள். பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய ஒரே பேறான குமாரனை; இந்த உலகத்திற்கு அனுப்பினதன் முதன் மையான நோக்கம் என்ன? ஏழைகள் பட்டினியில்லாமல் வயிறாற போஷpகப்பட வேண்டும் என்பதற்காகவா? அல்லது வறியவர்கள் யாவ ரும் இந்த உலகில் கல்விகற்ற செல்வந்தராக மாற வேண்டும் என்பத ற்காகவா? அவைகளைவிட மேலான நோக்கமொன்று உண்டு. ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காக அவர் ஆண்டவராகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். 'ஒருவரும் கெட்டுப்போகாமல்' என்ற வார்த்தையிலே 'ஒருவரும்;' என்று சொல்லிய அந்த வார்த்தையின் வழியில் முதலாவதாக நான் இடம்பெற வேண்டும். ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிகொண்டாலும் தன் ஆத்துமாவை கெடுத்துக் கொண்டால் அவனுக்கு இலாபம் என்ன? இந்த உலகத்தோடு அழிந்து போகும் நற்பெயர் மாத்திரம் அவனுக்கு மிகுpதியாக இருக்கும். எனவே, நற்கிரியைகளை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள், அதற்கு மேலாக, உள்ளான மனிதன் நாளுக்கு நாள் ஆண்டவர் இயேசுவை போல மாறும்படியாக உங்களை ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் அனதி னமும் உம்முடைய திருக்குமாராகிய இயேசுவின் சாயலிலே வளர்ந்து பெருகும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27