புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2024)

பெற்றுக் கொண்ட பெரிதான விடுதலை

கொலோசெயர் 1:13

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவ ருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.


இந்த உலகத்திலே அந்தகார கிரியைகளை தங்கள் மாம்சத்தின் புயத் தினால் நடப்பிக்கின்றவர்களுக்கு நாம் பயந்து வாழ்ந்த நாட்கள் இரு ந்தது. ஓயாத தொல்லைகளினாலே, இளைப்படைந்து, மனச் சமாதானம் இல் லாமல் நாளைய நாளைக் குறித்த நம்பிக்கையற்றுப் போயி ருந்தது. துன்மார்க்கருடைய துர்ச் செயல்களுக்கு பயந்து, அவர்கள் கேட்பதை கொடுத்துவிட்டால் உயி ர்தப்பி வாழ்ந்து விடலாம் என்று எண்ணியிருந்தது போல, சத்துரு வானவனை எதிர்த்து மேற்ககொ ள்ள முடியாதிருந்ததால், அவ னோடு இணைந்து, அவனுடைய அந்தார கிரியைகளுக்கு உடன் பட்டால் வாழ்ந்து விடலாம் என்று படுக்கையில் நித்திரையில்லாமல் மனம் அங்கலாய்த்த நாட்கள் இருந்தது. ஆனால், அவை யாவும் ஒரு நொடிப்பொழுதிலே அகன்று போய்விட்டது. உலகத்தை ஜெயங் கொண்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்ட கணப்பொழுதிலே, தீராத தொல்லைகளை உண்டு பண்ணிவந்த அசுத்த ஆவிகள் ஓடிப்போய்விட்டது. இந்த உலகத்திலிரு க்கிறவனிலும் நம்மோடிருக்கும் ஆண்டவர் இயேசு பெரியவர் என்று அறிந்ததினாலே உண்டான மனச்சமாதானம், பயத்தை புறம்பே தள் ளிவிட்டது. மாம்சத்திலே போர் செய்து அழிந்து கொண்டிருந்த நாட்கள் முடிவடைந்து, தேவபெலனத்தினாலே உலகத்தை ஜெயிக்கும் தைரியம் மனதிலே உண்டாகி விட்டது. ஒருபோதும் கைவிடாமல் என்னை நடத் திச் செல்லும் மேய்ப்பராகிய இயேசு என்னோடிருக்கின்றார் என்ற ஆன ந்தம் மனதிலே பெருகிக் கொண்டே இருக்கின்றது. இப்படியாக ஆண் டவராகிய இயேசுதாமே தன் வாழ்விலும், தன் குடும்பத்திலும் நடப் பித்த ஆச்சரியயமான விடுதலையைக் குறித்து ஒரு விசுவாசியானவன் நன்றியுள்ள இருதயத்தோடு தியானித்தக் கொண்டிருந்தான். ஆம், பிரிய மான சகோதர சகோதரிகளே, பாதாளத்தின் வல்லடிக்கு நம்மை விலக் கிகாத்த ஆண்டவராகிய இயேசுவின் பாடுகளை குறித்து இந்த நாட்க ளிலே அதிமாக தியானம் செய்கின்றோம். அவருக்காக புலம்பி அழுவ தற்காக அல்ல. மாறாக பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தத்தை குமா ரனாகிய இயேசு நிறைவேற்றி முடித்தது போல, அவருடைய குமா ரர்கள் குமாரத்திகளாக அழைக்கப்பட்ட நாமும், பிதாவுடைய சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்

ஜெபம்:

அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு என்னை அழை த்த தேவனே, நான் உம்முடைய புண்ணியங்களை தியானித்து, நன்றி யோடு உம்மைத் துதிக்கும் உள்ளத்தை எனக்குத்; தந்தருள்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:4