தியானம் (மாசி 29, 2024)
யார் குற்றம் சாட்ட முடியும்?
ரோமர் 8:34
கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
ஒரு ஊரிலே இருந்த குடியானவன், தன் குடும்ப கஷ்டங்கள் காரணமாக அந்த ஊரிலுள்ள முதலாளியானவனொருவனிடத்திலே அதிகமாய் கடன் பட்டிருந்தான். நாட்கள் கடந்து செல்லும் போது, தன் பொருளாதார நிலைமை முன்னேற்றமடையும் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், நிலைமையோ மோசமடைந்ததால், அவன் விரக்தியினிமித்தம் மதுபான வெறிகொண்டு, தன் நாட்களை வீண டித்துக்கொண்டிருந்தான். அவனுடைய முதலாளியானவன், அவனை அழைத்து நீ இப்படியெல்லாம் ஏன் உன் வாழ்க்கையை வீணாய் அழித்து கொண் டிருக்கின்றாய். நான் உன் கடன்கள் யாவையும் மன்னித்துவிடுகின்றேன். உன் ஊதாரித்தனைத்தையும் நினையா திருப்பேன். நீ உன்னிடமிருக்கும் வீணான பழக்கங்களை விட்டுவிடு நான் உனக்கு நல்ல ஊதியத்தோடு வேலை தருகின்றேன் என்று கூறி தன் ஊழியர் களோடு அவனை சேர்த்துக் கொண்டான். பழைய வீணான வாழ்க்கை யைவிட்டு அவன் தற்போது புதிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். ஆனால், அவந்த ஊரிலுள்ள அவனது சில உறவினர், பழைய நண்பர்கள், முகமறியாதவர்கள் அவனைக் காணும் போது, அவனுடைய பழைய கடன்களை பற்றி பேசி, பலதரப்பட்ட பெயர்களால் அவனை கேலி செய்து வந்தார்கள். ஆனால், அவனோ, என் முதலாளி நான் பட்ட கடன்களை மன்னித்து, என்னை தன்னிடமாய் ஏற்றுக் கொண்டிருக் கின்றார். எனவே, நான் பழைய குப்பைகளை விட்டுவிட்டேன் ஆனால் இவர்களோ, என் னுடைய பழைய குப்பைகளை தங்கள் இருதயத்திலே தூக்கி சுமக்கின்றார்கள். கடன் கொடுத்தவர் கடன் களை மன்னித்திரு க்க நான் ஏன் கவலை அடைய வேண்டும் என்று கூறிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, 'தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற் றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.' (ரோமர் 8:31-34). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
ஜெபம்:
என்னை நீதிமானாக்கிய தேவனே, என் முன்நிலையை குறித்து அவதூறாய் பேசப்படும் பேச்சினால் நான் குழப்பமடையாதபடிக்கு, உம்மிலே நிலைத்திருந்து புதிய வாழ்க்கையை வாழ நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 1:7-10