தியானம் (மாசி 28, 2024)
      மீண்டும் கட்டுகின்ற தேவன்
              
      
      
        எரேமியா 24:6
        அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட் டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
       
      
      
        சில ஆண்டு காலமாக கர்த்தரோடு இருந்து, அவருக்கு ஊழியம் செய்து வந்த ஒருவன். தேவ வெளிப்பாடுகளை பெற்று, இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, இந்த உலகத்தை மீட்க வந்த மெசியா என்று அறிக்கை செய்தவன். ஆண்டவராகிய இயேசு தாமே, பிதாவாகிய தேவனால் கனத்தையும் மகிமையையும் பெற்ற போது, அவரோடேகூட அவனும் பரிசு த்த பருவதத்திலிருந்து, வானத்திலிரு ந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட் டவன். அவருடைய நாமத்திலே பல அற்புதங்களை நடப்பித்தவன். இயே சுவை கனப்படுத்த முந்திக் கொண் டவன். ஆனாலும், ஒரு சந்தர்பத்திலே, தன் எஜமானனாகிய இயேசுவை எனக்கு தெரியாது என்று, ஒரு முறை யல்ல, மூன்றுமுறை மறுதலித்து விட்டான். இந்த உலகின் போக்கி ன்படி, தன்; எஜமானனை ஒருவன் மறுதலிப்பவனாக இருந்தால், அவன் அதிக தண்டனைகளை பெற்று, எஜமானனிடத்தில் எந்த பங்கோ பாகமோயின்றி, அவன் அவமானத்தோடு அகற்றப்படுவான். தன் எஜ மானனாகிய இயேசுவை மறுதலித்த அந்த சீஷனாகிய பேதுரு, தன் எஜமானனாகிய இயேசுவை  அறிந்திருந்ததால், அவன்; தன் பெலவீ னத்தை மூடி மறைக்காமல், தன் குறைவை ஏற்றுக் கொண்டு, மனம் கசந்து அழுதான். அவனுடைய இருதயத்தை அறிந்த எஜமானனாகிய இயேசுவோ, பேதுருவை மறுபடியும் ஏற்றுக் கொண்டு, அவனை தேற்றி, தன் சீஷர்களுக்கள் அவனை முதல்வனாக நியமித்தார். தேவ அழைப்பைப் பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், ஒருவேளை நீங்கள் உங்களை கனம்பெற்ற பெரிய ஊழியக்காரன் என்று கருதினாலும் அல்லது ஒன்றும் ஆகாத அற்பமானவனென்று கருதினாலும், கர்த்தரிடத்திலே இரக்கங்கள் உண்டு என்பதை அறிந்தவர்களாக, உங்கள் குற்றங் குறைகளை மூடி மறைக் காமல், நீங்கள் மீண்டும் கட்டப்படும்டிக்கு, எந்த நிபந்தனைகளுமின்றி  உங்களை அவரிடம் முற்றாக ஒப்புக் கொடுங்கள்.  ஒருவேளை நீங்கள் கடையான திசைமற்றும் துரத்துண்டுபோனது போல தள்ளப்பட்டுப் போனாலும், அவர் மீண்டும் உங்களை  கட்டுவதற்கு தயை பெருத் தவராக இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு  உங்கள் பாவங்களை மன்னித்தால், அதைக் குறித்து யார் நியாயம் பேச முடியும்? எனவே தாழ் மையுள்ள இருதயத்தோடு கிருபாசனத்தண்டையிலே தைரியத்தோடு சேருங்கள்.
      
      
      
            ஜெபம்: 
            அன்பின் தேவனே, காலங்கள் கடந்து சென்றாலும், எத்தனை ஆண்டுகளாக அனுபவமிக்கவனாக இருந்தாலும், நான் உம்முடைய சமுத்திலே என்னை தாழ்த்தி மனந்திரும்புகின்ற இருதயத்தை தந்து வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
      
 
      
              மாலைத் தியானம் - உபா 30:1-5