புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2024)

மறைவான பெலவீனங்கள்

2 கொரிந்தியர் 12:9

என் கிருபை உனக்குப்போ தும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.


ஒரு காரியாலயத்திலே வேலை செய்து வந்த மனிதனொருவன், பதவி உயர்வும் சம்பள உயர்வையும் விரும்பி வேறொரு கம்பனியிலே நேர்மு கத்தேர்விற்காக சென்றிருந்தான். உண்மையும் உத்தமும் ஒருபக்கம் இருக்க, இந்த உலகத்தின் வழக்கப்படி அந்த வேலையை எப்படியா வது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்ததால், தன்னிடமிருந்த சில தகமைகளை சற்று மிகைப்படுத்தி, தன்னிடம் இல்லாத சில தகமை களை தன்னிடம் இருக்கின்றது என்று கூறி, அந்தக் கம்பனியின் இயக்குனரைக் கவர்ந்து கொண்ட hன். இறுதியாக, இன்றைய உலகத்தின் வழக்கம் போல, அந்த கம்பனியின் இயக்குனர், அந்த மனிதனானவனை நோக்கி: உன்னிடம் உள்ள பெலவீனங்கள் (Weak Points)என்ன என்று கேட்டார். அந்த மனித னானவன் தன்னிடமிருந்த சில பெலவீனங்களை நன்றாக அறிந்திருந்தும், இன்றைய உலகத்தின் வழக்கம் போல, சமார்த்தியமாக பதிலை கூறி, அந்த கேள்வியையும் சமாளித்துக் கொண்டான். கோணலும் மாறு பாடுமான உலகத்திலிருந்து கறைதிறையற்ற வாழ்வை வாழ வேண்டும் என்று வேறு பிரிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, உலகத்திலே பல மனிதர்கள் இப்படியாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், சில விசுவாசிகளும், தேவ சமுகத்திலே தங்கள் குற்றங் குறைகளையும், பெல வீனங்களையும் மூடி மறைத்து, சூழ்நிலைகளை சமாளித்து, சமார்த் தியமாக வென்றுவிடுவோம் என்று வாழ்ந்து வருகின்றார்கள். இருதங் களை ஆராய்ந்தறிகின்ற கர்த்தர், மனிதர்களுடைய சிந்தை இன்னதென்று அறிந்திருக்கின்றார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்று அறிந்தும் தங்கள் உண்மையான நிலைமையை கர்த்தரிடம் கூறுவதற்கு தயக்கம் கொள்கின்றார்கள். உண்மையைக் கூறினால், இந்த உலகத்தி லுள்ள எஜமானன்கள் வேலை தரமாட்டார்கள் என்று மனிதர்கள் பொய் யை உண்மையைப் போல கூறுகின்றார்கள். ஆனால், நம்முடைய எஜமா னனானிய ஆண்டவர் இயேசுதாமே, பெலவீனன் என்று ஒருவரையும் தள் ளிவிடுபவர் அல்ல. பாவிகள் பாவத்திலே அழிந்து போகக்கூடாது என்று பாவிகளை இரட்சிக்கும்படியாக அவர் இந்த உலகத்திற்கு வந்தார். எனவே, பெலவீனங்களை மறைக்காமல், ஆண்டவராகிய இயேசுவினி டத்திலே அறிக்கை செய்யுங்கள். அவர் உங்களை அரவணைத்து, உங் கள் பெலவீனங்களை மேற்கொள்ள பெலன் தந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

தாழ்மையிலிருந்த என்னை தூக்கியெடுத்த தேவனே, உம்மு டைய சமுகத்திலே நான் என் குற்றங்குறைகளை மறைக்காமல், அறிக்கை பண்ணிவிட்டுவிடும் உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19

Category Tags: