புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2024)

கர்த்தருடைய சத்தம்

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


நெடுஞ்சாலையிலே தன் நவீன மோட்டார் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்ற கொண்டிருந்த மனிதனானவன், சாலையிலே போடப்பட்டிருந்த வேகத்தின் அளவின் அடையாள குறிப்ப்Pட்டை கண்டிருந்தும் வேகத்தை தணிக்காமல் வண்டியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தான். அவனுடைய வண்டியிலே பொருத்தப்பட்டிருந்த நவீன கருவியும், வண்டியானது அதி வேகமாக செல்கின்றது என்ற எச்ச ரிப்பு சத்தத்தை தொனித்தது. அதை யும் பொருட்படுத்தாமல், அவன் அதிவேகமாகவே வண்டியை ஓட்டி, அன்று சேதமில்லாமல் வீடு வந்து சேர்ந்தான். நாளடைவிலே சாலை விதிகளையும், எச்சரிப்புப் தொனி யையும் பொருட்படுத்தாமல், வண் டியை ஓட்டி செல்வது அவனுக்கு பழக்கமும் வழக்கமாயிற்று. இது ஒழுங்குமுறைகளை யும், சட்டதிட்ட ங்களையும், எச்சரிப்பு தொனிகளையும் பொருட்படுத்தாத உணர்வற்ற நிலையாகும். ஒருநாள் அவன் தான் சந்திக்கப்போகும் பாதகமான சேத த்தை குறித்து உணர்வற்றவனாகவே வாழ்ந்து வந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தர்தாமே நாம் நடக்க வேண் டிய வழிகளை நமக்கு தம்முடைய வார்த்தைகள் வழியாக காண்பித்து வருகின்றார். அந்த ஜீவ வார்த்தைகளை உபதேசிப்பதற்கு தம்முடைய தாசர்களை நியமித்திருக்கின்றார். கோணலும் மாறுபாடுமான இந்த உல கத்திலே வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழும்படியாக ஒழுங்கு முறை களை நமக்கு கொடுத்திருக்கின்றார். அவருடைய வார்த்தை நம்மை தேற்றுகின்றது, அருமையான ஆலோசனைகளை தருகின்றது, தீங் கிலே விழுந்து போகாதபடிக்கு எச்சரிப்பின் சத்தத்தை தொனிக்கின்றது. கீழ்படியாமையிலே நாம் நடக்கும் போது, அவருடைய திவ்விய வார் த்தைகள் நம்மை கண்டித்து, தண்டித்து, சீர்திருத்தி, நடத்துகின்றது. தன் வாகனத்தை உணர்வற்றவனாக ஓட்டிய அந்த மனிதனானவனைப் போல நாம் ஒழுங்கு முறைகளை அசட்டை செய்யாமல், உணர்வுள்ள வர்களாக, நம்முடைய நல்ல மேய்ப்பனாகிய ஆண்டவர் இயேசுவின் சத்தத்தை கேட்டு அவரின் பின் செல்கின்றவர்களாக நாம் வாழ வேண் டும். எல்லா வேளைகளிலும் கர்த்தருடைய வசனம் உங்கள் சிந்தையை ஆட்கொண்டிருப்பதாக. காலத்திலே நற்கனிகளை அறுவடை செய்யும் படிக்கு, சத்திய வேதத்தை தியானியுங்கள், அதன்படி உங்கள் வாழக் கயை அமைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனை தரும் தேவனே, நீர் தந்திருக்கும் நல்வாழ்வின் ஒழுங்கு முறைகளை நான் மனப்பூர்வமாக பற்றிக் கொண்டு வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோசுவா 1:8