புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2024)

கர்த்தருடைய வழிகள்

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


பொருளாதார நெருக்கடியான நாட்களிலும், நீதியான முறையிலே உழைத்து, தன் பிள்ளைகளை வளர்ந்து வந்த தகப்பனானவர், குறித்த காலத்திலே தன்னிடமிருந்த சொத்துக்களை பிரித்து தன் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்திருந்தார். அவருடைய மகனானவன், அந்த சொத் துக்களின் பாதியை பணமாக்கி, பங்கு சந்தையிலே பெரும் முதலீடு செய்தான். அதை அறிந்த அவனுடைய தகப்பனானவர், மகனே, அகலக்கால் வைக்காதே, ஒரு இர விலே செல்வத்தை திரட்ட வேண் டும் என்ற மனம் உனக்கு வேண் டாம் என்று அறிவுரை கூறியிருந் தார். அதற்கு மகனானவன் தன் தகப்பனானவரை நோக்கி: அப்பா, நான் பொருளாதார முகாமைத்து வைத்தை குறித்து நன்றாக கற்றிருக்கின்றேன், எனவே கவலைப்படாதிருங்கள் என்று பதிலளித்தான். இரண்டு வருடங்களுக்குள், பங்கு சந்தை விழ்ச்சி கண்டதினால், அவன் மிகுந்த நஷ்டமடைந்தான். அதை ஈடு செய்யும்படிக்கு, தன் மற்றய பாதி சொத்தை ஈடாக வைத்து, வங்கியிலே பெரும் கடனுதிவியை பெற்றுக் கொண்டான். ஒரு வழியில்லையென்றால், மறுவழி உண்டு என்று தன் தகப்பனானவருக்கு அறிவுரை கூறினான். சில வருடங்கள் சென்றபின்பு, அவன் வங்கிக்கடனு தவியின் வட்டியை செலுத்த முடியாமல், அவனுடைய சொத்தை இழந்து போகும் தறுவாயில், தன் நண்பர்களிடமிருந்து அதிக வட்டிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுக் கொண்டான். அபாய நேர்வுகள் இல்லாமல் அதிக பலனை கண்டடைய முடியாது, (No Risk No Return) எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி, நண்பர்கள், உறவுகள், வியாபார ஸ்தாபனங்கள் மத்தியில் தன் நன்மதிப்பை இழந்து, எழுந்திருக்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை காணும்வரை, தன் தகப்பனானவரின் அறிவுரையை அசட்டை பண்ணி, அவன் தன் வாழ்க்கையை சமாளிக்க முயற்சி செய்தான். மேலானவைகளை தேடும்படிக்கு, உன்னதமானவருடைய அழைப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய வழிகளிலே 'சூழ்நிலைகளை சமாளித்தல்' என்ற பதத்திற்கு இடமேயில்லை. அவருடைய வழிகள் செம்மையானவைகள். ஞானமுள்ளவர்கள் அதைக் கண்டடைகின்றார்கள். கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவர்களிடத்திலே அந்த ஞானம் தங்கும். அவருடைய வழியிலே நடக்கின்ற உத்தம மார்க்கத்தார் மனநிறைவுடனான சமாதானத்தை தங்கள் வாழ்க்கையிலே கண் டடைகின்றார்கள்.

ஜெபம்:

செம்மையான வழியிலே என்னை நடத்தும் தேவனே, வாழ்வு தரும் உம்முடைய திருவார்த்தைகளை நான் தியானித்து அந்த வார்த்தைகளின் வழியிலே நான் வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - சங்கீதம் 27:11