புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2024)

என்னை காக்கும் கேடகம்

சங்கீதம் 144:2

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடு விக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும்,என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்து கிறவருமாயிருக்கிறார்.


கர்த்தர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவருமாகயிருக்கின்றார் என்று தேவ பக்தனாகிய தாவீது ராஜா தன் சங்கீதங்களிலே பாடியிருக்கின்றார். இத்தகைய வாக்குதத்தங்களை விசுவாசியானவர்கள் அறிக்கை பண்ணி பாடுவதில் மிகவும் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், சிலவேளைகளிலே தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்குள் அடங்கியிருக்கும் நன்மையான ஆசீர்வாதங்களை குறித்து அறிவி ல்லாதவர்களாக வாழ்ந்துவிடுகின்றார்கள். ஒரு பராக்கிரமசாலியின் வீட்டிற்குள் நாம் தஞ்சம் புகுந்தால், யார் நம்மை மேற்கொள்ள முடியும்? அந்த பராக்கிரமசாலியின் வீடு நம்முடைய கோட்டையாக இருந்தால், யார் நம்மை எதிர்த்து உள்ளே வரமுடியும்? அந்த பராக்கிரமசாலி நம் கேடகமாக இருந்தால், யார் நம்மை நோக்கி அக்கினியாஸ்திரங்களை எய்ய முடியும்? சற்று சிந்தனை செய்து பாருங்கள். நம்முடைய எதிரியாகிய பிசாசான வன் நம்மை வஞ்சிக்கும்படி, தந்திரமான வார்த்தைகளை பேசி, நம் கண்களை கவர்ந்து கொள்ளும் செயல்களை செய்கின்றவனாக இருக்கி ன்றான். சில வேளைகளிலே சில விசுவாசிகள் அந்த வஞ்சகனின் செய ல்களை ஆசீர்வாதம் என்று எண்ணிக் கொள்வதால், அவைகளை பெற் றுக் கொள்ளும்படி தங்கள் வாழ்க்கையை சமரசம் செய்ய எண்ணமு ள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நம்முடைய தயாபரரும் உயர்ந்த அடைக்க லமுமாக இருப்பதால், நாம் நம் கண்போன போக்கில் சென்று, வஞ்ச கனின் கண்ணிக்குள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, நம்மை தடுத்து நிறுத்தி காத்துக் கொள்கின்றார். நம் கண்கள் தெளிவடையும்படிக்கும், நம் இருதயம் உணர்வடையும்படிக்கும் சில காரியங்களை நம் வாழ்விலே அனுமதிக்கின்றார். எனவே நான் நம்பினவர் நீர் என்று சகலமும் அறிந்த தேவனாகிய கர்த்தரை நோக்கி நீங்கள் அறிக்கை செய்பவர்களாக இருந்தால், அந்த நம்பிக்கையின்படி, அவர் ஏற்ற காலத்தில் தாம் முன் குறித்தவைகளை நிறைவேற்றி முடிக்கும்படிக்கு, அவருடைய பலத்த கரத்திற்குள் பொறுமையுடன் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

என்னைக் காக்கும் கேடகமாகிய தேவனே, உம்முடைய ஆசீர்வாதங்களுக்குள் அடங்கியிருக்கும் மேன்மையான காரியங்களை நான் அறிந்து கொள்ளும்படிக் என் மனக்கண்களை திறந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:11-13