தியானம் (மாசி 20, 2024)
தேவ ஆசீர்வாதங்கள்!
சங்கீதம் 144:15
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
ஒரு பிள்ளையானவன், தன் பெற்றோர் தன்னை அரவணைத்து தேற்றும் போதும், பண்டிகை நாட்களிலே பரிசுப்பொருட்களை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போதும், தன் பெற்றோரை குறித்து நல்லுணர்வுள் ளவனாகவும், அவர்கள் தன்மேல் அன்பு கூறுகின்றார்கள் என்பதையும் குறித்து தன் நண்பர்களுக்கு கூறிக்கொள்வான். ஆனால், சில வேளைகளிலே அவனை நெறிப்படுத்தும்படி கண்டித்து, தண்டிக்கும்போது, தன் பெற் றோர் ஏன் தன்னை இப்படி யாக துன்பப்படுத்துகின்றார்கள் என்று தன்னுள்ளே நொந்து கொள் வான். அதாவது, தன் அறிவுக்கெட்டியபடி தான் விரும்பியவைகளை பெற்றோர் கொடுக்கும் போதும், தன் மனதிற்கேற்றவைகளை செய்வத ற்கு பெற்றோர் அனு மதிக்கும் போதும், அது அவனுக்கு ஆசீர்வாத மாகவும், பெற்றோர் அவன் எதிர் காலத்தைக் குறித்த நல்லெண்ண த்துடன், அவனை நெறிப்படுத்தும் போது, அவன் அதை தனக்கு இட றலாக எண்ணிக் கொள்கின்றான். அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்ற அருமையான சகோதர சகோதரி களே, தேவனாகிய கர்த்தருடைய வார்த்தை சம்பூரணமானது என்பதை யும், அந்த வார்த்தைக்குள் அருமையான ஆசீர்வாதங்கள் அடங்கியி ருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து, அறிக்கை செய்தும், அனுப வித்து வருகின்றீர்கள். நம்முடைய பிதாவாகிய தேவன்தாமே தம்மு டைய பிள்ளைகள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி, அவர்கள் வாழ்வில் தடையாக இருப்பவைகளை அவர்களைவிட்டு அகற்றும்படி க்கு, அவர்களை நெறிப்படுத்துவதை ஆசீர்வாதம் என்று கூறுவீர்களா அல்லது இடறல் என்று கூறுவீர்களா? கர்த்தரைத் தெய்வமாகக் கொண் டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின் றது. நாம் நித்திய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு, இந்த உலகிலே இருக்கும் அநித்தியமானவைகளையும், அழிவுக்குரியவைக ளையும் நம்மை பற்றிக் கொள்ளாதபடிக்கு நம்மை காத்து வழிநடத்து கின்றார். அவருடைய வார்த்தையின்படி அவர் காட்டும் வழியிலே நாம் நடந்து செல்லும் போது, நம் வாழ்க்கைக்கு அவசியமற்ற சில கதவுளை திறக்கக்கூடா தபடி அடைத்து விடுகின்றார். ஆனால், பரலோகத்தின் திறந்த வாசலை ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு தம்முடையவர்களு க்காக திறந்து வைத்திருக்கின்றார். இவ்விதமான சீரைப்பெற்றவர்க ளாகிய நாம் பாக்கியம் பெற்றவர்களே.
ஜெபம்:
என் பிதாவாகிய தேவனே, நான் உம்முடைய திவ்விய வழிநட த்துதலைக் குறித்து நொந்து கொள்ளாமலும், சோர்வடையாமலும் இருக்க எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங் 92:5