புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2024)

சமாதானத்தின் காரணம் என்ன?

2 கொரிந்தியர் 4:8

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;


ஒரு விசுவாசியானவன் கர்த்தர் தன்னை எவ்வளவு திரளான ஆஸ்திகளால் ஆசீர்வதித்திருக்கின்றார் என்பதைக் குறித்தும், தனக்கு கிடைத்த மனச்சாமாதானத்தைக் குறித்தும் பலமுறை சபை மத்தியிலே சாட்சி பகர்ந்து கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின்னர் அந்த ஊரை தாக்கிய கடும் புயலினாலே, அவன் வசித்து வந்த வீடும், முதலீடு செய்திருந்த வியாபார ஸ்தலங்களும் அழிந்து போய்விட்டது. தன க்கு ஏற்பட்ட பொருளாதார இழ ப்புக்களை சகித்துக் கொள்ளக் கூடாமல், தன் மனவேதனையிலே அவிசுவாசத்திற்குரிய வார்த்தைகளை பலர் முன்னிலையிலே அறிக்கையிட்டான். என் சமாதானத்தை நான் இழந்து போனேன் என்று கண்ணீர்விட்டு அழுதான். துக்க முக த்தோடு தன் நாட்களை கழித்து வந்தான். இந்த விசுவாசியானவனுடைய சமாதானம் எதினால் அவனுக்கு உண்டாயிருந்தது? அவன் கொண்டிருந்த சமாதானம் அவனிடம் இருந்த பொருட்களால் உண்டாயிருந்ததால், அந்தப் பொருட்களை அவன் இழந்துபோனபோது, அவன் தன் சமாதானத்தையும் இழந்து போனான். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்களுடைய சமாதானம் எதினால் உண்டாயிருக்கின்றது? உங்கள் அங்க த்தவர்களினாலோ? கல்வி, செல்வம், அந்தஸ்துகளினாலோ? நாட் டின் பொருளாதாரத்தினாலோ? நண்பர்கள் உறவினர்களினாலோ? சபைப் போதகரினாலோ? சகவிசுவாசிகளினாலோ? அல்லது மெய்யான சமாதானத்தை தரும் ஆண்டவர் இயேசுவினாலோ? இன்றைய நாளிலே உங்களை நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதை குழப்பும் காரணிகள் என்ன? அவிசுவாசத்தின் வார்த்தைகளை பேச தூண்டும் சம்பவங்கள் என்ன? அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவா ர்கள். (2 தீமோ 3:12). ஆனாலும் அவர்கள் சமாதானக் காரணராகிய இயேசுவுக்கு பிரியமுள்ளவர்களாக வாழ்வதினாலே, தேவ சமாதா னத்தை இழந்து போகமாட்டார்கள். நம்மோடு வாசம் செய்யும் சமாதானப் பிரபுவாகிய கர்த்தரை எம்மிடமிருந்து யார் பறித்துக் கொள்ளமுடியும்? ஒருவராலும் கூடாது. ஆம், தேவ தாசர்கள் அறிக்கை செய்தது போல 'நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.' ஏனெனில் நம்மோடு இருப்பவர் மிகவும் பெரியவராயிருக்கின்றாரரே.

ஜெபம்:

நித்திய சமாதானத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, மெய்யான சமாதானத்தின் காரணராகிய இயேசுவே என் மனச்சமாதானத்தின் காரணராக எப்போதும் இருந்து, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6

Category Tags: