தியானம் (மாசி 18, 2024)
      மனத்துயரம் உண்டாகும் போது...
              
      
      
        எபிரெயர் 12:3
        தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
       
      
      
        இழப்புக்கள் மனதில் துக்கத்தை உண்டுபண்ணும். மனிதர்கள் நம்மை எதிர்த்து, ஏளனம் செய்யும் போது, அதனால் உண்டாகும் ஏமாற்றமும், அவமானமும், நிந்தையும் மனவேதனைக்குரியவைகள். தகாத வார்த் தைப் பிரயோகங்களினாலே மனதிலே காயங்கள் உண்டாகிவிடுகின்றது. சவுக்கடிகளாலே சரீத்திலே உண்டாகும் காயங்கள் நோவுகளை உண்டு பண்ணும். இந்த உணர்வுகளுக்கும் அனுபவங்களுக்கும் எந்த மனிதனும் விதிவிலக்கானவனல்ல. ஆனால் இத் தகைய போராட்டம் நிறைந்த சூழ் நிலைகளின் மத்தியிலே ஒரு மனித னானவன் எப்படியாக நடந்து கொள் கின்றான் என்பதை மையாகமாக வைத்து அவன் கிறிஸ்துவின் சாய லை தரித்தவனாக வாழ்க்கின்றானா அல்லது மனதிலே தோன்னும் மாம் சத்தின் உந்துதலுக்கு இடம் கொடு த்து உலகபோக்கில் வாழ்க்கின்றானா என்பதை அவன் தன்னைத்தானே நிதானித்து அறிந்து கொள்ளமுடியம்.  ஆதியிலே மனிதனானவன் கீழ்ப் படியாமையினாலே தேவசாயலை இழந்து போனான். அதனால் அவன் நித்திய மரணத்தை சம்பாத்தித்துக் கொண்டான். தேவ சாயலை இழந்து போனதினாலே உலகத்திலே பாவம் உண்டாகியது. அந்த பாவத்தின் விளைவுகளினாலே, தன் சகோதரனை கொன்று போட்ட காயீனைப் போல, மனிதர்கள் மனிதர்களை எதிர்த்து, ஏமாற்றி, ஏளனம் செய்து, துன்மார்க்கமான மாம்சத்தின் கிரியைகளை ஒருவருக்கெதிராக ஒருவர் நடப்பிக்கின்றார்கள். கிறிஸ்துவின் சாயலில் வளர்கின்ற விசுவாசியான வனோ, பாடுகள், அவமானங்கள், நிந்தைகள் வாழ்வை சூழ்ந்து கொள் ளும் போது, ஆண்டவராகிய இயேசு எப்படியாக அவற்றை பிதாவான வருடைய சித்தப்படி ஜெயம் கொண்டாரோ, அப்படியே அவனும் ஜெயம் கொள்கின்றான். நம்முடைய ஆண்டவராகிய இயேசுதாமே, தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வல துபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.  ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர் களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோ தமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகி த்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். (எபிரெயர் 12:2-3). பரலோக தேவனால் அழைப்பட்ட நீங்கள் பரலோகத்திற்குரியவர்களாக நடந்து கொள்ளுங்கள்.
      
      
      
            ஜெபம்: 
            உன்னதமான தேவனே, துன்பங்கள் துக்கங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல் உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலிலே வளர்ந்து பெருகும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
      
 
      
              மாலைத் தியானம் - எபிரெயர் 13:14