புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2024)

வழுவிப்போக வைக்கும் வழிகள்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


ஆதியிலே ஏவாளானவள், தேவனாகிய கர்த்தர் செய்யக்கூடாது என்று விலக்கி வைத்த காரியத்தைக் குறித்து, சர்ப்பத்;தோடு சம்பாஷணை செய்தாள். அதனால், தேவனானவர் பொல்லாப்பு வரும் என்று விலக்கி வைத்த நன்மை தீமை அறியும் மரத்தின் கனியானது அவளுடைய மனதை கவர்ந்து கொண்டது. சம்பாஷணையின் முடிவிலே அவள் வஞ்சிக்கப்பட்டு போனாள். இன் றைய நாட்களிலே இந்த உலகத்தின் போக்கு, அதன் கொள்கைகள், தத் துவங்களை, அதன் நடை, உடை, பாவனையை மனிதர்கள் மனதிலே விதைப்பதற்கு ஊடகமாக பயன்படு த்தப்படும் காரியங்கள் எது என்பதை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். திரைப்படங்கள் அவை களில் முக்கியமானதொன்றாக திகழ்ந்து வருகின்றது. மனிதர்களின் மனத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முழுமையாக கவர்ந்து கொள்ளும், கதை வசனங்கள், தத்துவ பாடல்கள், காட்சிகளோடு காணப்படுகின்றது. அவைகளை உருவாக்கின்றவர்கள் யார்? அவர்கள் நித்திய ஜீவனை நோக்கி செல்கின்றார்களா? அவர்களின் நோக்கம் என்ன? மனிதர்கள் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற இலக்கையுடையவர்களா? மேலானவைகளை தேடும்படி அழைப்பை பெற்ற சகோதர சகோதரி களே, சிந்தியுங்கள்! வேத வார்த்தையின் வெளிச்சதில் உங்களது வழி களை ஆராய்ந்து பாருங்கள். மீன்களை கவரும் இரைகளைப் போல, மனிதர்களின் மனதை கவரும் காரியங்களின் முடிவு என்ன என்பதை நிதானித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் சுத்த மனசாட்சி சூடுண்டு, உணர்வற்று, கடினப்பட்டுப் போகாதபடிக்கு யாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள். உலகமும், மாம்சமும் பிசாசானவனுக்கு அடியில் இருக்கி ன்றது. 'நான் தான் பிசாசு, நான் மனிதர்களின் கண்களை குருடாக்கின்ற வன், தேவ பிள்ளைகளை வஞ்சிக்கின்றவன்' என்ற பெயர் பலகை யோடு அவன் உங்களிடம் வருவதில்லை. மனிதர்களின் கண்களுக்கு நன்மையாக தோன்றும் வழிகளை காண்;பித்தவனாகவே உங்களிடம் வருவான். நீங்கள் உங்கள் இதயக் கதவை சிறிதாக அவனுக்கு திறந்து, அவனுடைய தீமையான விதைகளை விதைப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருக்கின்றது. அந்த தீய விதைகள் வளர்ந்து கசப்புள்ள மாம்சத்தின் கிரியைகளை வெளியரங் கமாக பிறப்பிக்கும். எனவே இந்த உலகத்திற்குள் உங்களை இழுத்துக் கொள்ளக்கூடியதும் மனித கண்களுக்கு நன்மையாக தோன்றுபவைக ளைக் குறித்து விழிப்புள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, மனிதர்களுக்கு செம்மையாக தோன்றும் வழி களிலே நான் நடவாமல், உம்முடைய ஜீவ பாதையிலே பொறுமையோடு ஓடத்தக்கதாக பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்து என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2