புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2024)

உலகத்தின் தூண்டில்கள்

மத்தேயு 10:16

ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.


கடலோரத்தின் அருகே சில சிறுவர்கள், தூண்டில்களை; வீசி மீன்களை பிடிப்பதற்காக அநேக நேரம் பொறுமையோடு காத்திருந்தார்கள். மீன்கள் ஒன்றேனும் அகப்படாததினால் அவர்கள் சோர்வடைந்து போனார்கள். அதைக் கண்ட சிறுவர்களின் தந்தையார் ஒருவர் அவர்களை அணுகி, எப்படிப்பட்ட இரைகள் மீன் களை கவரும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி, சில இரைகளை அவர்களுக்கு கொடுத்தார். அவர்கள் அந்த இரைகளை தூண்டிலில் போட்டபோது, சில நிமிடங்களில் மீன்கள் அக ப்பட்டதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். இதற்கொத்ததாகவே இந்த உல கத்தின் போக்கிற்கு விசுவாசிகளை இழுத்தெடுப்பதற்காக வீசப்படும் கவர்ச்சியான இரைகளை கொண்ட தூண்டில்களை குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்றைய உலகிலே சில கிறிஸ்தவர்கள் எப்படியும் வாழலாம் என்ற கருத்தையுடையவர்களாக தங்கள் மனதும் மாம்சமும் விரும்பியதை செய்தவதற்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆரம்பம் இருப்பதைப் போல, வஞ்சனைக்கும் ஒரு ஆரம்பம் உண்டு. அதன் முதற்கட்டமாக, ஆகாதது என்று விலக் கிய காரியங்களை: கொஞ்சமாய் பார்த்தால் என்ன? மட்டாக அருந்தினால் என்ன? அளவோடு பழகினால் என்ன? கலலெறி தூர இடைவெ ளியில் ஐக்கியமாக இருந்தால் என்ன? என்ற கேள்வியோடு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கின்றார்கள். இது சில விசுவாசிகளின் சிந்தனையில் தோன்றும் கவர்ச்சிகள். கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா அனை த்தையும் உப்பப்பண்ணுவது போல, நாளடைவிலே; விலக்கப்பட்ட காரியத்திற்குள் தன்னை சிக்கிக் கொள்கின்றான். பின்னர் நாங்கள் நன்றாகத்தான் இருக்கின்றேன், நீங்கள் சற்று இந்தப் பக்கம் வந்து பாருங்கள் என்று மற்றவர்களையும் அழைக்கின்றார்கள்;. இப்படியாக விலக்கப்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ளும் கூட்டம் பெருகும் போது, அந்தக் கூட்டத்தார் உணர்வற்றுப் போய்விடுவதால், விலக்கப்பட்ட காரி யங்களை ஏற்றுக் கொள்ளாமல் வேறு பிரிந்த வாழ்க்கை வாழ்வோரை பார்த்து 'இவர்கள் பைத்தியக்காரர், புறம்போக்கானவர்கள்' என்று பரி யாசம் செய்கின்றார்கள். பாவத்திற்கு வழிநடத்தும் உலக காரியங்களை குறித்து எப்போதும் நாம் மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக வாழ வேண்டும். ஆரம்பத்திலே அவை நன்மையானது போல காட்சியளிக்கும். நாளடைவில் இருதயத்தை உணர்வற்றதாக மாற்றிவிடும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்விற்கு வேறுபிரித்த தேவனே, எல்லாவற்றையும் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து நலமானதை பற்றிக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8