புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2024)

சமாதானத்தைக் காத்துக் கொள்ளுங்கள்

ரோமர் 12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் வீட்டையும், வீட்டை சுற்றியிருந்த நிலங்களையும் சுத்தப்படுத்தி, நன்றாக பராமரித்து வந் தான். அவன் தன் குடும்பத்தோடு விடுமுறைக்கு சென்ற போது, அந்த ஊரிலுள்ள சில வீணர்கள், இராத்திரி வேளையிலே, அவனுடைய வீட்டு முற்றத்திலே நாற்றமெடுக்கும் குப்பை கூலங்களை கொட்டிவிட்டார்கள். விடுமுறை நாட்கள் முடிந்து வீடு திரும்பிய போது, தன் வீட்டு முற்றத்தின் நிலையை கண்டபோது, அவன் அதிர்ச்சியடைந்தான். ஆனா லும், அவன் இது வீணர்களின் அநி யாயமான செயல் என்று அறிந்து, தன் மனதை அதிகமாக குழப்பிக் கொள் ளாமல், முதலாவதாக தன் வீட்டு முற் றத்தை நன்றாக விளக்கி சுத்தப்படு த்தி, முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வந்தான். பிரியமானவர்களே, சில வேளைகளிலே சில விசுவாசிகளினுடைய வாழ்க்கையிலே உபத்தி ரவங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, 'நான் என் சமாதானத்தை இழந்து விட்டேன்' என்றும், அந்த இழப்பிற்கு 'அந்த சகோதரனே காரணம்' என் றும் கூறிவிடுகின்றார்கள். அதாவது, அந்த விசுவாசிகளுக்கு உண்டாயி ருந்த சமாதானத்தை அந்த சகோதரன் எடுத்துவிட்டு, சமாதானம் இருந்த இடத்தில் கசப்பு, பிரிவினை, வைராக்கியம் போன்றவற்றை வைப்பத ற்கு சில விசுவாசிகள் இடங் கொடுத்துவிடுகின்றார்கள். இந்த உல கிலே நம்மை சூழ இருக்கும் மனிதர்கள் எப்போதும் நீதியான கிரியை களையும், சமாதானத்திற்கு ஏதுவானவைகளையுமே செய்வார்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறவில்லை. இந்த உலகத்திலே உபத்திர வங்கள் உண்டு. ஆனாலும் அந்த உபத்திரவங்களை உண்டு பண்ணுகி ன்றவர்கள் நம்முடைய சமாதானத்தை திருடிக் கொள்ளாதபடிக்கு, உபத்திரவங்களை மேற்கொள்ள வேண்டிய வழியை தம்முடைய வார் த்தையும் வழியாகவும், அந்த வார்த்தையை எப்படி கைகொள்வ தென் பதை தம்முடைய வாழ்க்கை வழியாகவும் நமக்கு காண்பித்துதிருக்கி ன்றார். எடுத்துக்காட்டாக, ஒருவன் உங்கள் குடும்பத்தைப்பற்றி காரணத் தோடேயோ, காரணமின்றியோ குறைவாக பேசும் போது, இந்த உலகத் தின் நீதியின்படி அதை மேற்கொள்ள நீங்கள் முயற்சி செய்யும் போது, நீங்கள் உங்கள் சமாதானத்தை இழந்துபோக இடம் கொடுக்;கின்றவர் களாக இருப்பீர்கள். ஆனால், அந்த சூழ்நிலையிலே, நாம் நம்முடைய மாம்சத்திலே செயற்படாமல், தேவநீதி உங்களில் நிறைவேற நீங்கள் இடங் கொடுப்பீர்களாக இருந்தால், நீங்கள் உங்கள் சமாதானத்தை காத்துக் கொள்வீர்கள்.

ஜெபம்:

உம்முடைய சமாதானத்தை எனக்கு தந்த தேவனே, நான் எல்லா சூழ்நிலைகளிலும் அந்த சமாதானத்தைக் காத்துக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ளவனாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:27

Category Tags: