தியானம் (மாசி 13, 2024)
மனமாற்றமும் இடமாற்றமும்
நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக் கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறு வான்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஸ்திரியானவள், தன் வாலிப நாட்களிலே தவறான செயலொன்றில் ஈடுபடாக இருந்ததை அந்த ஊரார் அறிந்திருந்தார்கள். தற்போது அவள் திருமணமாகி தன் கணவரோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். அவள் தன் தவறான செயலை முற்றாக விட்டு மனந்திரும்பி அநேக ஆண்டுகள் கடந்து சென்றபோதும், ஊரார் அதைவிட்டுவிட மனதில்லாதிரு ந்தார்கள். அதனால், அவளுடைய கண வனார், தன் இளம் குடும்;பத்தோடுகூட அந்த ஊரைவிட்டு வேறொரு ஊரு க்கு சென்று அங்கே சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஸ்திரி யானவளோ, தான் வளர்ந்து வந்த ஊரையோ, சமுதாயத்தையோ குற்ற ப்படுத்தாமல், இவை யாவும் பல ஆண் டுகளுக்கு முன் தான் வாழ்ந்த கீழ்படி யாமையின் வாழ்வினாலே உண் டான பின்விளைவுகள் என்று தன் மனதிலே ஏற்றுக் கொண்டவளாக இருந் தாள். அவள் தற்போது, பின்னாவைகளை மறந்தவளாய், முன் னான காரியங்களை நாடி, தான் சென்ற புதிய ஊரிலே, தன் குடும் பத்தை ஒழுங்காக கட்டுவதில் மிகவும் கவனமுள்ளவளாக வாழ்ந்து வந் தாள். மறுரூபமாகும்படி அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, பொதுவாக மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று கூறிவிடுகின்றார்கள். அதனால், தங் கள் குடும்பத்தை, சமுதாயத்தை, ஊரை, சபையை விட்டு தூரம் சென்று விடுகின்றார்கள். தூரம் செல்வதினால் மனதிலிருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லை, மாறாக ஒருவன் தன் குற்றத்தை அறிக்கை பண் ணிவிட்டுவிடும் போதே அவன் வாழ்வடைவான் என்று சத்திய வேதம் அறிவுரை கூறுகின்றது. ஆனால் இன்று சில விசுவாசிகளும் தங்கள் பழைய வாழ்க்கையை உலகம் முற்றாக மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்கின்றார்கள். வேறு சிலர், அதிகாரத்தோடு கோரிக்கை (Demand) விடுகின்றார்கள். அதனால் இன்னுமதிகமாய் தங்களுக்கு தாங்களே நோவுகளை உண்டாக்கிவிடுகின்றார்கள். நீங்களோ அப்படியாக வாழா மல் நன்மையை கண்டடையும்படி இடத்தை மாற்றுவதற்கு முன்னதாக, சத்திய வேதம் கூறும் அறிவுரையின்படி உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள். அப்பொழுது இடமாற்றங்கள் உங்களுக்கு நற்பலனைத் தரும்.
ஜெபம்:
வாழ்வு தரும் ஆலோசனைகளை தந்த தேவனே, உம்முடைய ஆலோசனைகளால் அடியேன் எச்சரிக்கப்படும் போது, நான் மனத்தாழ்மையோடு மனந்திரும்பி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 19:11-14