புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2024)

விலையேறப்பெற்ற ஆத்துமா

சங்கீதம் 112:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


பல வருடகாலமாக நல்ல சாரதியாக இருந்து வந்த மனிதனொருவன், ஒரு புதிய மோட்டார் வண்டியை கொள்வனவு செய்தான். சில மாதங்களுக்கு பின்பு, அந்த மோட்டார் வண்டியை வீட்டிலிருந்து ஓட்டிக் கொண்டு செல்லும் போது, வாகனத்தின் இயந்திரத்தின் பக்கமாக இருந்து அசாதாரணமான சத்தம் வருவதைக் கேட்டு, நெடுஞ்சாலைக்கு செல்லவதற்கு முன்னதாக, உடனடினடியாக அந்த வாகனத்தை இடை நிறுத்தி பரிசோதனை செய்தான். பின்னர், இந்த வாகனத்தை இந்த நிலையில் நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றால், பாரிய விளைவுகள் ஏற் டலாம் என்று அறிந்தவனாய், தன் வாகனத்தை பழுது பார்க்கும் இயந் திர வல்லுநரிடம் (ஆநஉhயniஉ) எடுத் துச் செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தான். அந்த சாராதியானவன் ஞானமுள்ளவனாய் விபரீதங்கள் வருமுன் காப்போம் என்ற மனநிலையுடையவனாக இருந்தான். பிரிய மான சகோதர சகோதரிகளே, உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை யிலே, வழமைக்கு மாறான சத்தங்கள் தொனிக்கும் போது நீங்கள் அதை எப்படி கையாளுகின்றீர்கள்? சில சூழ்நிலைகளிலே உங்கள் மனதிலே பெரு நெருப்புப் போல கோபம் வரும் போது அந்தக் கோப த்தோடு கிரியைகளை உடனடியாக நடப்பிக்க முற்படுகின்றீர்களா? மன திலே கசப்பு நிறைந்திருக்கும் போது, மற்றவர்களோடு நியாயம் பேச முற்படுகின்றீர்களா? அந்த ஞானமுள்ள சாராதியானவன், தன் வாகன த்தை பழுது பார்க்கும் நிபுணர்களிடம் கொண்டு சென்றது போல, காலதாமதமில்லாமல் உங்கள் இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற, தேவ னுடைய சமுகத்திலே உங்களை அர்ப்பணியுங்கள். கோபம், கசப்பு, வன்மம் போன்ற சுபாவங்கள் உங்களை கட்டுப்படுத்த எத்தனிக்கும் போது, அப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகளை மேற்கொள்வதற்கு பரி சுத்த வேதாகமம் கூறும் ஆலோசனைளை வாசித்து தியானியுங்கள். மேற் கொள்ள முடியாதிருக்கும் பெலவீனங்களை ஜெபத்திலே தரித்திருந்து ஜெயம் கொள்ளுங்கள். இயந்திரங்களுக்கு குறித்த காலத்திலே எண் ணெயிட்டு எவ்வளவு கிரமமாக பராமரித்து வருகின்றீர்கள். உங்கள் வாக னம் பழுதடைந்த நிலையிலிருந்தால், பின்விளைவுகளை தவிரக்கும்படி அதில் உங்கள் பிள்ளைகள் ஏற்றிச் செல்ல மாட்டீர்கள். இயந்திர ங்களைவிட எவ்வளவாய் விசேஷpத்த ஆத்துமாவை குறித்து மிக அதிக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகத்தோடு அழிந்து போகும் வாழ்க்கையின் காரியங்களை மேன்மைபடுத்தாமல், நித்திய ஜீவனுக் குரியவைகளை மேன்மைப்படுத்தி வாழ பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - 2 கொரி 13:5

Category Tags: