புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2024)

மனநிலை

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு பெற்றோர் தங்கள் மகளானவலுடைய திருமண நானை முன்னிட்டு வீட்டிலே பல ஆயத்தங்களை செய்து வந்தார்கள். திருமணத்திற்கு முன் இராத்திரியிலே, வீட்டில் வருகை தந்திருந்தவர்களின் யாரோ ஒருவரின் கவனயீனத்தினால், திருமணத்திற்காக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெரிய பூச்சாடியொன்று விழுந்து உடைந்து விட்டது. தகப்பனானவர் அதை அறிந்து கொண்டால், அந்த நல்ல நாட்களிலே வீட்டிலே நிச்சயமாக குழப்பம் ஏற்படும் என்று அறிந்த தாயானவள், அவர் வீடு திரும் ம் முன்பதாக, தங்கள் அயலிலேயு ள்ளவர்களின் வீட்டிற்கு விரை ந்து சென்று, நிலைமையை எடு த்துக் கூறி, அவர்கள் வீட்டிலி ருந்த பூச்சாடியை சில நாட்களு க்கு தரும்படியாக கேட்டு, அதை கொண்டு வந்து, முன்புபிருந்தது போல அலங்கரித்து வைத்தாள். ஏனெனில், அதை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? என்று ஆராய்ந்தறிகின்ற நேரமானது இதுவல்ல என்று அந்தத் தாயானவள் நன்கு அறிந்திருந்தப டியால், தன்னுடைய மகளானவளின் திருமணம் மனக் குழப்பத்தோடு நடைபெறக்கூடாது என்று தீர்மானித்தவளாய், குழப்பமேற்படும் காரணி களை தவிர்;த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை உடையவளாக இருந்தாள். நித்திய வாழ்விற்கென்று அழைப்பைப் பெற்ற சகோதர சகோதரிகளே, நாம் மணவாளன் வரஆயத்தமுள்ளவர்களாக காத்திரு க்கும் மணவாட்டிகளைப் போல வாழ வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இந்த உலகிலே வாழும் நாம், நம்முடைய குடும்ப, சபை வாழ்க்கையிலே குறைகளை எதிர்நோக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்டாகுவதுண்டு. அந்த சூழ்நிலைகளிலே, குறைகளை பெரிதாக்கி பிரச்சனைளை பெரிதாக்கிவிடும் மனநிலையுடையவர்களாக இருக்கின்றீர்களா அல்லது பிரச்சனைகளை தணிக்கும்படி குறைகளை நிறைவாக்கும் மனநிலையுடையவர்களாக இருக்கின்றீர்களா? சில வேளை களிலே சிலர் அற்பமான காரியங்களை சகித்துக் கொள்ள முடியாமல், அவைகளை பெரிதாக்கிவிடுவதினாலே, குடும்பங்களிலும், சபைகளிலும் பெரிதான குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றார்கள். அதனால் உண்டா கும் பின்விளைவுகள் மனவேதனைக்குரியவைகளாக மாறிவிடுகின்றது. ஐக்கியத்தில் குறைகளை நிறைவாக்கின்றவர்களாகவும், சமாதான த்தை நாடித் தேடுகின்றவர்களாகவும், அதற்காக ஜெபிக்கின்றவர்களாக வும் காணப்படுவோமாக.

ஜெபம்:

பெலவீனமான நேரத்திலே பெலன் தந்து வழிநடத்தும் தேவனே, குறைவுகளை நிறைவாக்க வேண்டும் என்ற மனநிலையானது என்னில் எப்போதும் இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 17:14