புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2024)

பாதுகாப்பின் வேலி

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


ஒரு தோட்டத்தின் சொந்தக்காரனொருவன், நிலத்தை நன்றாக பண்படுத்தி, விதைகளை விதைத்து, தன் தோட்டத்திற்கு வேலியடைத்து அயராமல் பிரயாசப்பட்டு பராமரித்து வந்தான். அது ஒரு வளமிக்க தோட்டம் போல காட்சியளித்தது. பலன் கொடுக்கும் நாட்கள் வந்தபோ தோ, அவன் தன்னுடைய பிரயாசத்திற்கேற்ப பலனை அடையாமல் போன தைக் குறித்து மனவேதனையடைந்தான். அதற்கான காரணம் என்ன என்று அறிய விரும்பினான். தன் தோட்டத்தி லுள்ள வேலியில்; சில இடங்களிலே சிறிய இடைவெளிகள் இருப்பதை கண்டு கொண்டான். அவன் வேலி போடும் போதும், அதை கண்டிருந்த போதும், அதை பின்பு பார்ப்போம் என்று விட்டு சென்றது அவன் ஞாபகத்திற்கு வந்தது. அந்த சிறிய திறப்பின் வழியாக, சிறிய நரிகள் உட்புகுந்து அவன் அடைய வேண்டிய பலனை கெடுத்துப் போட்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, விசுவாச மார்க்கத்தாரு டைய வாழ்க்கையில் இதற்கொத்த காரியங்கள் நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்ட நாள் முதல், தங்கள் பரிசுத்த வாழ்;க்கையை காத்துக் கொள் ளும்படி பிரதிஷ்டையோடு வாழ்ந்து வருகின்றார்கள். அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபித்து வருகின்றார்கள். சபை கூடி வருதலை விட்டுவிடாதிருக்கின்றார்கள். ஆனாலும், பழைய நண்பர்க ளோடு சில தொடர்புகள், விட்டு வந்த பழைய காரியங்கள், தங்கள் வாழ்க்கையிலே உள் நுழைவதற்கு தங்கள் வாழ்க்கையிலோ அல்லது தங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலோ சிறிய இடைவெளிகளை திறந்து விடுகின்றார்கள். அந்த இடைவெளிகள் பார்வைக்கு அற்பமான தும், இவர்களுடைய பெலத்திற்கு அடங்கியிருப்பதுபோலவும் காட்சி யளிக்கும் ஆனால், குறித்து காலத்திலே அவை வாழ்க்கையின் பலனை முழுமையாக அடையக்கூடாமல், விளைச்சலை கெடுத்துப் போடுகின்றது. பிரியமானவர்களே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே போட்டிரு க்கும் எல்லையை உடைத்துப் போடாதிருங்கள். தேவசெய்திகளை அசட்டை செய்யாதிருங்கள். சிறிய காரியம் என்று வேதம் கூறும்லோசனை களில் சிறியதொன்றையும் அற்பமாக எண்ணாதிருங்கள். அவரு டைய வார்த்தையே நம்மைக் காத்துக் கொள்கின்றது. பிரயாசத்தின் பலனை கண்டடையும்படிக்கு கர்த்தருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, அற்பமான காரியங்களுக்காக மேன்மை யானவைகளை நான் இழந்து போகாதபடிக்கு, உம்டைய வாக்கை என் இருயத்திலே காத்துக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உன்னதப்பாட்டு 2:15